|
(இ
- ள்.) கடி கமழ் மலரும் கலவையும் அழகும் கதிர் மணிப்
பணிகளும் சுமந்து - மணங்கமழ்கின்ற பூக்களையும் சாந்தினையும்
அழகினையும் ஒளிபொருந்திய மணிகளாலாகிய அணிகளையும் தாங்கி,
கொடியென இசைந்து - கொடிபோன்ற பொருத்தமுடையவளாகி, நிறைவு
உறப் பூத்த கொம்பு என அசைந்து அசைந்து ஓல்கி - நிறைவுற்றுப் பூத்த
பூங்கொம்புபோலத் துவண்டு துவண்டு நுடங்கி, அடியிணை படியில் படப்
பொறாது அஞ்சி - இரு பாதங்களும் நிலத்திற் படுவதற்குப்
பொறுக்கமுடியாது பயந்து, அன்புறு கடகரிப் பின்போம் பிடி எனக்
கன்னி நடை பயில் அன்னப் பெடைஎன - அன்பு பொருந்திய
மதம்பொருந்திய ஆண் யானைக்குப் பின் போகின்ற பெண் யானை
போலவும் இளமையான நடை பழகுகின்ற அன்னப்பேடு போலவும், மட
நடை பெயர்வாள் - இளமையான நடை நடப்பான்.
அசைந்து
அசைந்து : அடுக்குத்தொடர். ஆண் யானைக்குப் பின்
போகும் பிடி நடையை உதாரணங்கூறியது நாணுடைமைக்கும்,
அன்னப்பெடை நடையை உதாணங் கூறியது மென்மைக்கும் கொள்க.
அடியிணை
படியிற் படப் பொறாது அஞ்சி எனப் பாதங்களின்
மென்மை கூறப்பட்டது.
(17)
| |
'தக்க
மணவாளன் நீ' எனச் சாற்றுதல் |
| 122. |
அன்னதன்
மையளை அமிர்தினில் பிறந்த
வணங்கபி டேகத்தை அனந்த
மன்னர்தம் தமக்கு மணம்செயக் கருதி
மணமொழிந் தவர்க்கெலாம் கொடாது
முன்னமெம் பெருமான் மொழிந்தவர்க் கன்றி
முடிக்கிலேன் கடிமணம் என்னச்
சொன்னதோர் மொழியும் கேட்டன மவணின்
தோள்களுக் கிசைந்தவள் என்றார். |
(இ - ள்.)
அன்ன தன்மையளை அமிர்தினில் பிறந்த அணங்கு
அபிடேகத்தை - அத்தகைய இயல்புடையவளைத் திருப்பாற்கடலிற் பிறந்த
திருமகள் சிறந்த அமிர்தத்தோடு பிறந்ததுபோல் பிறந்த சந்திரமதியை,
மன்னர் தம் தமக்கு மணம் செயக் கருதி மணம் மொழிந்தவர்க் கெலாம்
கொடாது - அநேக அரசர்கள் தங்கள் தங்களுக்குத் திருமணஞ்
செய்துகொள்ள நினைத்து மணம் பேச வந்தவரில் ஒருவற்கும் கொடாது,
முன்னம் எம் பெருமான் மொழிந்தவர்க்கு அன்றி - முன்னே
சிவபெருமான் யாருக்குக் கொடுக்க வேண்டமென்று சொன்னாரோ
அவர்க்கே அல்லாமல், கடி மணம் முடிக்கிலேன் என்ன - திருமணஞ்
செய்து கொடுக்கமாட்டேன் என்று, சொன்னது ஓர் மொழியும் கேட்டனம்
- சொன்ன ஒப்பற்ற மொழியையும் கேட்டோம், அவள் நின் தோள்களுக்கு
இசைந்தவள் என்றார் - அவள் உன்னுடைய தோள்களிற் கூடுதற்குத்
தக்கவள் என்று முனிவர்கள் சொன்னார்கள்.
சிவபெருமான் மொழிந்ததாவது : சந்திரமதி மங்கல
அணியோடு
பிறந்ததால் அத் திருமங்கல நாண் எவர் கண்ணுக்குத் தோன்றுகிறதோ
|