|
அவர்க்கே அவளை மணஞ்செய்து
கொடுக்கவேண்டும் என்பது. எலாம் :
எல்லாம் என்பதன் தொகுத்தல்; கொடாது : எதிர்மறை வினையெச்சம்.
கொடு : பகுதி; ஆ : எதிர்மறை இடைநிலை; த் : எழுத்துப்பேறு; உ :
வினையெச்ச விகுதி; அன்றி : குறிப்பு வினையெச்சம்; கடி மணம் :
உரிச்சொற்றொடர். முடிக்கிலேன் - முடி : பகுதி : கு : சாரியை; இல் :
எதிர்மறை இடைநிலை; ஏன் : தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.
(18)
| |
மன்னவன்
காதல் வளர்ச்சி |
| 123. |
பாதகம்
என்னாக் கடிந்தகா மத்தீப்
பங்கமுற் றுறைவிடம் பெறாது
மாதவர் உரைத்த மொழிவழி வந்து
மன்னவன் செவிவழிப் புகுந்தாங்
கூழைவந் தலைக்கும் வெளிவிளக் கதனின்
உளமலை வுறவலைத் தோங்கிக்
காதலங் கொழுந்து வளர்ந்திட உருகிக்
கனலினி லிடுமெழு கானான். |
(இ - ள்.)
பாதகம் என்னாக் கடிந்த காமத்தீ பங்கமுற்று உறைவு
இடம் பெறாது மாதவர் உரைத்த மொழிவழி வந்து மன்னவன் செவி வழி
புகுந்த ஆங்கு - பழி என்று நீக்கிய காமத்தீயானது முனிவர்
மொழிகளாகிய காற்றால் அசைவுற்றுத் தங்கும் இடம் பெறாது அதன்
வழியே வந்து அரசன் காதுகளில் புகுந்து, அங்கே ஊதை வந்து
அலைக்கும் வெளி விளக்கு அதனின் - காற்று வந்து மோதி அசைக்கும்
வெளியிடத்தில் வைத்த விளக்குப்போல, உளம் மலைவுற அலைத்து -
மனத்தை மயங்கி அலமரச்செய்து, காதல் அம் கொழுந்து ஓங்கி
வளர்ந்திட - காதலாகிய அழகிய கொழுந்து உயர்ந்து தளிர்த்துவளர,
உருகிக் கனலிடை மெழுகு ஆனான் - உள்ளம் உருகித் தீயிலிட்ட
மெழுகு போல் ஆயினான்.
என்னா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்;
காமத்தைத்
தீயாகவும், முனிவர் மொழியைக் காற்றாகவும் உருவகப்படுத்தினமையின்
உருவக அணி. ஊதை வந்தலைக்கும் வெளிவிளக் கதனின் : உவமை
யணி; கலவை அணி.
(19)
| 124. |
சந்திர
கலையால் நெக்குநீர் பொழிவ
சந்திர காந்தமே அல்லால்
அந்தர சாதிச் சிலையினுண் டாகா
தவளிவன் மனைவியென் றயனார்
முந்தவே விதித்த விதியினால் அடங்கா
மோகமும் தாகமும் மிகுந்து
புந்திகெட் டறிவு நிறைபொறை தோற்றம்
போக்கினான் யாக்கையும் தளர்ந்தான். |
|