|
(இ
- ள்.) முனிவர் - முனிவர்கள், அம் கண் மா ஞாலம் காக்கும்
அரசனே - அழகிய இடம் அகன்ற பெரிய உலகினைக் காக்கும் அரசனே!,
அரசர் ஏறே - மன்னர்க்குள் ஆண் சிங்கம் போன்றவனே!, திங்கள் மா
முகத்து வாமத் திருவை நீ வதுவை சூட்ட - சந்திரன் போலும் சிறந்த
முகத்தையுடைய அழகில் திருமகளுக்கு ஒப்பான சந்திரமதியை நீ மணம்
புரிய, எங்களால் செய்யும் ஆறு ஏது இயம்பு என - நாங்கள்
செய்யவேண்டிய வழி என்ன என்று சொல்லுக என்று, முனிவர் கூற -
முனிவர்கள் சொல்ல, செங்கண் மால் அனையான் செவ்வாய் செங்கையாற்
புதைத்துச் செப்பும் - சிவந்த கண்களையுடைய திருமால் போன்ற
அரிச்சந்திரன் சிவந்த கைகளால் வாயை மூடிக் கொண்டு சொல்லுவான்.
மா
ஞாலம் : உரிச்சொற்றொடர். செப்பும் : செய்யுமென் வாய்பாட்டு
வினைமுற்று.
(22)
| |
'மணம்
பேசி வருக' என முனிவரை விடுத்தல் |
| 127. |
அல்லியங்
குழலாள் தன்னை அருமணம் அடியேன் சூட்டக்
கல்லியற் சுரமும் காடும் கடந்துகால் வருந்த நீர்போய்
வல்லியைப் பயந்தோற் கண்டு மணமொழிந் தந்த வேந்தன்
சொல்லிய நெறிகேட் டென்பால் வருகவென்றினிதுசொன்னான். |
(இ - ள்.)
அல்லியம் குழலாள் தன்னை - அழகிய இதழ்களை
யுடைய மலர் புனைந்த கூந்தலையுடைய சந்திரமதியை, அடியேன்
அருமணம் சூட்ட - அடியேன் திருமணஞ்செய்ய, கல் இயல் சுரமும்
காடும் கடந்து கால் வருந்த நீர் போய் - கற்கள் நிறைந்துள்ள
பாலைவனமும் காடுகளும் கடந்து கால் வலிக்கும்படி நீங்களே போய்,
வல்லியைப் பயந்தோன் கண்டு மணம் மொழிந்து - வல்லிக்கொடிபோன்ற
சந்திரமதியைப் பெற்ற மதிதயனைக் கண்டு திருமணப்பேச்சு நிகழ்த்தி,
அந்த வேந்தன் சொல்லிய நெறி கேட்டு - அந்த மதிதயன் சொல்லிய
பதிலைக் கேட்டு, என்பால் வருக என்று இனிது சொன்னான் -
என்னிடத்தில் வந்து சேர்க என்று இனிமையாகச் சொன்னான்.
அல்லி அம் - அம் : சாரியை, அல்லி என்பது அகவிதழ்.
அது
மலருக்காயிற்று : சினையாகுபெயர். வல்லி : கொடி. இஃது உவமை
யாகுபெயராய்ப் பெண்ணினைக் குறித்தது. வல்லி - சந்திரமதி.
(23)
| |
புது
மணம் காண்பது உறுதியெனப் புகலுதல் |
| 128. |
காதலால்
மன்னன் கூற மாதவர் கருணை வெள்ளம்
மீதெலாம் எழுந்து பொங்க வேந்தகேண் மீண்டி யாங்கள் போதலும் செய்வேம் உங்கள்
புதுமணம் காண்பேம் ஆயின் ஈதலால் உறுதி வேறொன் றில்லையென் றெழுந் திருந்தார்.
|
(இ
- ள்.) மன்னன் காதலால் கூற - அரசன் விருப்பத்தோடு
சொல்ல, மாதவர் கருணை வெள்ளம் மீதெலாம் எழுந்து பொங்க -
முனிவர்களுடைய பெருங்கருணை மேல் எழுந்து பொங்க, வேந்த கேள் -
அரசனே!
|