|
கேட்பாயாக, யாங்கள்
மீண்டு போதலும் செய்வேம் உங்கள் புது மணம்
காண்பேம் ஆயின் - நாங்கள் திரும்பி வருவோம் உங்கள் சிறந்த
திருமணமும் காண்போமானால், ஈது அலால் உறுதி வேறொன்று இல்லை
என்று எழுந்திருந்தார் - சிவபெருமான் அன்பராகிய உமக்கு இவ்வுதவி
செய்தலினும் சிறந்த நன்மை வேறொன்றும் இல்லை என்று சொல்லி
எழுந்தார்கள்.
காண்பேம்;
தன்மைப்பன்மை வினைமுற்று. எழுந்திருந்தார் -
எழுந்திரு பகுதி.
(24)
| |
முனிவர்
மதிதயன்பாற் செல்லல் |
| 129. |
சந்திர
வதிதன் பார தனங்கள்உன் சைல தாமச்
சுந்தர மார்பின் மூழ்கச் சூட்டுவேம் என்ன வாழ்த்தி
மந்திர முனிவர் எல்லாம் மண்டபம் அகன்று நீங்கி
இந்திர புரியே அன்ன வெழில்நகர் கடந்து போனார். |
(இ - ள்.)
சந்திரவதி தன் பார தனங்கள் உன் சைல தாமம் சுந்தர
மார்பின் மூழ்கச் சூட்டுவேம் என்ன வாழ்த்தி - சந்திரமதியின் பெரிய
கொங்கைகள் உனது மலைபோன்ற மாலையணிந்த அழகிய மார்பில்
அழுந்தும்படி மணமாலை சூட்டுவோம் என்று வாழ்த்தி, மந்திர முனிவர்
எல்லாம் - நிறைமொழி மாந்தர் எல்லாரும், மண்டபம் அகன்று நீங்கி
இந்திர புரியே அன்ன எழில் நகர் கடந்து போனார் -
அரிச்சந்திரனுடைய கொலு மண்டபம் நீங்கி அமராவதிநகர் போன்ற
அழகு நிறைந்த அயோத்திநகரினைக் கடந்து போனார்கள்.
அன்ன : உவம உருபு.
(25)
| |
மன்னவன்
காதலால் மயங்குதல் |
| 130. |
மாதவர்
போன பின்னர் மண்டபம் நீங்கி மன்னன்
ஆதுலர் போலப் பள்ளி அறைபுகுந் தமளி நண்ணி
மீதெலாம் அனங்க வாளி குளித்திட வெளியிற் புக்குக்
காதலங் கடலுள் தாழ்ந்தான் கரைநிலை கண்டி லாதான். |
(இ
- ள்.) மாதவர் போன பின்னர் மன்னன் மண்டபம் நீங்கி -
முனிவர் போன பிறகு அரசன் கொலுமண்டபத்திலிருந்து போய், ஆதுலர்
போலப் பள்ளி அறை புகுந்து - வறியவர் போலப் படுக்கை அறையில்
சென்று, அமளி நண்ணி - படுக்கையில் பொருந்தி, மீதெலாம் அனங்க
வாளி குளித்திட - மேலெல்லாம் மன்மதன் அம்புகள் தைக்க, காதல் அம்
கடலுள் தாழ்ந்தான் கரை நிலை கண்டிலாதான் வெளியிற் புக்கான் -
ஆசைக் கடலுள் அழுந்திக் கரை காணாது அதனுள் நிற்றற்கும்
ஆற்றாதவனாகி வெளியே வந்தான்.
மாதவர்
: உரிச்சொற்றொடர்; மண்டபம் : ஐந்தாம்வேற்றுமைத்
தொகை; அரச அணிகளின்றி வேட்கைப்பசி உள்நின் றுடற்றச்
சென்றதனால் 'ஆதுலர் போல்' என்றார். காதல் அம்-அம் : சாரியை.
தாழ்ந்தான்: முற்றெச்சம்;
|