|
கண்டிலாதான் : எதிர்மறை
முறெச்சம் : காண்; பகுதி : ட் : இறந்தகால
இடைநிலை; இல் : எதிர்மறை இடைநிலை; ஆ: சாரியை: ஆன் :
வினையாலணையும் பெயர் விகுதி : த் : எழுத்துப்பேறு. காண் : கண்
என ஆனது விகாரம். புகு : பகுதி. ஒற்று இரட்டித்து இறந்தகாலங்
காட்டியது. கரை நிலை : உம்மைத்தொகை.
"காமக்
கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்"
என்பது திருக்குறள்.
(26)
| |
காதல்
வெதுப்பக் கலங்குதல் |
| 131. |
மயங்கினான்
வருந்தி னான்மெய் வாடினான் மதனன் அம்பால்
தியங்கினான் வளர்ந்த காமத் தீயினால் செயலிற் றாவி
தயங்கினான் தீரா மோக தாகத்தால் தளர்ந்து மேன்மேல்
உயங்கினா னுருகி மெய்சோர்ந் துளத்தொடும் உரைப்பா
னானான்.
|
(இ - ள்.)
மதனன் அம்பால் மயங்கினான் வருந்தினான் மெய்
வாடினான் தியங்கினான் - மன்மதன் அம்பினால் (அரிச்சந்திரன் மயங்கி)
வருந்தி உடன் மெலிந்து சோர்ந்து, வளர்ந்த காமத்தீயினால் செயல் இற்று
ஆவி தயங்கினான் - மென்மேல் மூண்ட வேட்கைத் தீயினால்
செய்வதறியாது உயிர் தயக்கமுற்று, தீரா மோக தாகத்தால் தளர்ந்து
மேன்மேல் உயங்கினான் - நீங்காத மோக தாகத்தினால் தளர்ந்து மேலும்
மேலும் வருந்தி, உருகி மெய் சோர்ந்து உளத்தொடும் உரைப்பன்
ஆனான் - மனம் உருகி உடல் சோர்ந்து தன் நெஞ்சோடு சொல்லத்
தொடங்கினான்.
மயங்கினான் வருந்தினான் வாடினான் தியங்கினான்
தயங்கினான்
உயங்கினான் என்ற வினைமுற்றுகள் எச்சப்பொருளை யுணர்த்தின.
(27)
| |
நெஞ்சொடு
கிளத்தல் |
| 132. |
தந்தமால்
களிற்றி யானைச் சந்திர தயன்தன் பாவை
வந்தமா முனிவரோடும் வந்திவண் மாய மாகி
எநதம்ஆ ருயிரை வௌவி எம்உளம் புகுந்து கைக்கொண
டந்தமா முனிவ ரோடு அகன்றதோ அறிகி லேமால். |
(இ
- ள்.) தந்த மால் களிற்று யானை சந்திரதயன் தன் பாவை -
கொம்புகளையுடைய மதம் பொருந்திய பட்டத்து யானையையுடைய
சந்திரதயனுடைய பெண்ணாகிய சந்திரமதி, வந்தாமா முனிவரோடும் இவண்
மாய மாகி வந்து எம் தம் ஆர் உயிரை வௌவி எம் உளம் புகுந்து
கைக்கொண்டு - இங்கு வந்த சிறந்த முனிவர்களோடு இங்கே
கட்புலனாகாத மாயை வடிவத்தில் வந்து என் மனம் புகுந்து நெஞ்சைக்
கொள்ளைகொண்டு, அந்த மா முனிவரோடு அகன்றதோ அறிகிலேம் -
அந்தச் சிறந்த முனிவர்களோடு சென்றாளோ தெரிகிலேன்.
களிறு
+ யானை - களிற்றி யானை : இகரம் குற்றியலிகரம் : பாவை
: உவமையாகுபெயர்; மா முனிவர் : உரிச்சொற்றொடர்; ஓகாரம் : ஐயம்;
|