பக்கம் எண் :


75

மாடத்து - மேல் உயர்ந்து நிற்கின்ற அழகிய மாளிகையில், வாரிதி
எழுந்தது என்ன வந்து - கடலெழுந்து பொங்கி வந்ததுபோல் வந்து,
அவன் தாளை போற்ற - அம் மதிதயன் அடியை வணங்குவதற்காக,
தேரும் யானையும் இழிந்து திறையிடும் அரசர் நிற்க - தேரினின்றும்
யானையினின்றும் இறங்கிக் கப்பம் செலுத்தும் காவலர் நிற்கவும், காரும்
நீள் கடலும் போல கதிர் மணி முரசம் ஆர்ப்ப - மேகமும் நீண்ட
கடலும் முழங்குவதுபோல ஒளிவீசும் மணிகள் கட்டிய முரசங்கள்
முழங்கவும் (36 ஆம் கவி) இருந்தான் என்ற வினைமுற்றுடன் முடிவு
செய்க.

     இதுவும் அடுத்த கவியும் குளகம். மேருவை வெளிசெய்தன்ன
என்பதும் வாரிதி எழுந்ததென்ன என்பதும் இல்பொருளுவமையணி. காரும்
நீள் கடலும் போல என்பது உவமை. இவ்விரண்டும் கலந்து நின்றதால்
இக்கவி கலவையணி.
                                                    (34)

 
       சந்திரதயன் கொலுவீற்றிருந்த சிறப்பு
139.

வெயில்விரி மகுடம் பொங்க விடுசுடர்க் கழல் விளங்கக்
கையில்விரி கடகம் மின்னக் கதிர்மணிக் குழைகள் தாழப்
பயின்மணி மரக தத்தால் பசுங்கதிர் பரப்பும் மாடச்
சயிலசா ளரங்கள் தோறும் வலயத்தின் கிரணம் தாக்க.

     (இ - ள்.) வெயில் விரி மகுடம் பொங்க - சூரியன் ஒளிபோல்
ஒளி வீசுகின்ற கிரீடங்கள் விளங்கவும், விடு சுடர்க் கழல் விளங்க - ஒளி
விடுகின்ற வீரக்கழல்கள் விளக்கமுறவும், கையில் விரி கடகம் மின்ன -
கைகளிலிருந்து ஒளி பரவுகின்ற கங்கணங்கள் ஒளி இலங்கவும், கதிர்
மணிக் குழைகள் தாழ - ஒளி வீசுகின்ற மணிகளாலான காதணிகள்
தொங்கவும், பயில் மணி மரகதத்தால் பசுங் கதிர் பரப்பும் மாடச் சயில
சாளரங்கள் தோறும் - பழகுகின்ற அழகிய மரகதக் கற்களால் பசுமை
ஒளி வீசும் மண்டபமாகிய பொன் மலையின் சன்னல்களில் எல்லாம்,
வலயத்தின் கிரணம் தாக்க - சந்திரதயன் அணிந்துள்ள வாகுவலயத்தின்
ஒளி பதிந்து தோன்றவும் இருந்தான் (36 ஆம் கவி) என்பதனோடு
கூட்டுக.
                                                    (35)

      அரியாசனத்தில் அமர்ந்திருந்த காட்சி
140. சிகரமா முலையார் செம்பொற் செழுமணிக் கவரி வீசப்
புகரன அமைச்சர் போற்றப் புரிதவ முனிவர் வாழ்த்தப்
பகர்தரு மறையோர் சூழப் பாவலர் கவிகள் பாட
மகரதோ ரணக்கீழ் மன்னன் மடங்கலா தனத் திருந்தான்.

     (இ - ள்.) சிகர மா முலையார் செம் பொன் செழு மணிக் கவரி
வீச - மலைச்சிகரம்போலும் பெரிய தனங்களையுடைய பெண்கள் சிவந்த
பொன்னாலும் ஒளி நிறைந்த மணிகளாலும் செய்யப்பட்ட வெண்சாமரைகள்
வீசவும், புகர் அன அமைச்சர் போற்ற - மதிநுட்பத்தில் சுக்கிரனை ஒத்த
மந்திரிகள் வணங்கவும், புரி தவ முனிவர் வாழ்த்த - தவம் புரிகின்ற
முனிவர்கள் வாழ்த்தவும், பகர்தரு மறையோர் சூழ - மறை பயில்