|
| |
அரிச்சந்திரன்
மாட்சியும் விழைவும் கூறுதல் |
| 143. |
மன்னாகேள்
சென்ற யோத்தி மாநகர் புகுந்து யாங்கள்
அந்நகர்க் கரசன் நீதி அருளரிச் சந்த்ரன் என்பான்
நின்நகர் வளமும் நின்தன் நெறியுநின் மகள்தன் னேரும்
சொன்னபின் நின்பால் எய்தும் உவகையே துணிந்து நின்றான். |
(இ
- ள்.) மன்னா கேள் - அரசனே கேட்பாயாக!, யாங்கள்
சென்று அயோத்தி மா நகர் புகுந்து - நாங்கள் புண்ணிய நீராடிச் சென்று
அயோத்திமாநகர் அடைந்து, அந்நகர்க்கு அரசன் நீதி அருள்
அரிச்சந்திரன் என்பான் - அந்த அயோத்திமாநகர்க்கு அரசனாகிய
நீதியும் அருளுமுடைய அரிச்சந்திரன் என்பவனிடத்தில், நின் நகர்
வளமும் நின் தன் நெறியும் நின் மகள் தன் ஏரும் சொன்ன பின் -
உனது நகரின் வளமையையும் உனது அரசியல் முறைமையையும் என்
மகளுடைய அழகினையும் உரைத்தபின். நின்பால் எய்தும் உவகையே
துணிந்து நின்றான் - அவன் உன்னிடம் வந்து அடையும் மகிழ்ச்சியையே
செய்யவேண்டிய கருமமாக எண்ணித் துணிந்தவ னானான்.
மாநகர்
: உரிச்சொற்றொடர்; நீதி அருள் : உம்மைத்தொகை;
உம்மைகள் எண்ணுப்பொருள். "நின் மகள் தன் நேரும்" எனப் பிரித்து
உன் மகளுடைய நேர்மையையும் எனப் பொருள் கூறினும் பொருந்தும்.
'நின்பால் எய்தும் உவகையே' என்றது குறிப்பால் 'நின் மகளை
மணம்புரியக் கருதுகின்றான்' என்பதை விளக்கியது.
(39)
| |
'சந்திரவதியின்
மணவினை முடிக்க வந்தனம்' என்றல் |
| 144. |
அறநெறி
மிக்கோர் தம்பால் அருந்ததிக் கற்பி னாளைப்
புறநெறி போகாவண்ணம் வருந்தியும் பொருந்தச் செய்தல்
மறநெறி அன்று மாயா மாதவந் தன்னின் மிக்க
திறநெறி அதனால் நின்பால் சேர்ந்தனம் செல்வ வென்றார்.
|
(இ
- ள்.) செல்வ ! - செல்வங்களெல்லாம் நிறைந்த அரசனே !,
அருந்ததிக் கற்பினாளை - அருந்ததியின் கற்பினைப்போன்ற கற்புடைய
சந்திரமதியை, அறநெறி மிக்கோர் தம்பால் பொருந்தச் செய்தல் -
அறநெறியிற் சிறந்தவரிடத்தில் திருமணப் பொருத்தத்தால் சேரச் செய்தல்,
மறநெறி அன்று - பாவமல்ல, வருந்தியும் புறநெறி போகா வண்ணம் மாயா
மாதவந் தன்னின் மிக்க திறநெறி - கடவுள் நெறியினின்று புறத்தே
செல்லாது வருத்தப்பட்டு மனத்தை அடக்குந் தன்மை வாய்ந்த அழியாப்
பெருந்தவத்தினும் மிகுந்த உறுதிபயக்கும் நெறியாகும், அதனால் நின்பால்
சேர்ந்தனம் என்றா - அந்த நோக்கத்தோடு திரும்பவும் உன்னிடம் வந்து
சேர்ந்தோம் என்றார்கள்.
அருந்ததிக்
கற்பினாள் : உவமைத்தொகை. தக்காரைத் திருமணஞ்
செய்துவைத்தல் முனிவரும் மேற்கொள்ளத்தக்க சிறந்த நெறி யென்பதாம்.
மாதவந்தன்னின் : ஐந்தாம்வேற்றுமை உறழ் பொருவில் வந்தது.
சேர்ந்தனம் : தன்மைப்பன்மை வினைமுற்று.
(40)
|