பக்கம் எண் :


78

  'அரிச்சந்திரன் நின் மகட்குத் தக்க கேள்வன் ஆம்' எனச்
   
            சூளுரை கூறல்
145. புவனமுள் ளளவும் யாங்கள் புக்கறிந் தனேக கோடி
நவநர பதிகள் தம்மைக் கண்டனம் நறுந்தார் வேந்தே
சிவன்நல்க நீப யந்த திருமகள் தனக்குக் கேள்வன்
அவனல தில்லை என்ன அருந்தவர் எடுத்து ரைத்தார்.

     (இ - ள்.) நறுந்தார் வேந்தே ! - மணம் நிறைந்த மாலை அணிந்த
அரசனே !, புவனம் உள்ளளவும் யாங்கள் புக்கு அறிந்து அநேக கோடி
நவ நர பதிகள் தம்மைக் கண்டனம் - பூஉலக எல்லையளவும் நாங்கள்
போய் ஆராய்ந்து அநேக புதிய அரசர்களைப் பார்த்தோம், சிவன் நல்க
நீ பயந்த திருமகள் தனக்குத் கேள்வன் அவன் அல்லது இல்லை என்ன
அருந்தவர் எடுத்து உரைத்தார் - பரமசிவன் அருளால் நீ பெற்ற அழகிய
மகளாகிய சந்திரமதிக்குத் தக்க கணவன் அரிச்சந்திரன் அல்லது வேறு
யாரும் இல்லை என்று அருந்தவம் புரியும் முனிவர் எடுத்து உரைத்தார்கள்.

     நரபதி - அரசன் கண்டனம் : தன்மைப்பன்மை வினைமுற்று.
நறுந்தார்: பண்புத்தொகை.
                                                    (41)

 
    சிவன் தந்த வரத்தைச் சிந்தையில் எண்ணுதல்
146.

மையலாற் றியகு ணத்து மாதவர் உரைப்பக் கேட்டுப்
பொய்யிலா மொழியால் உள்ளம் பொருந்தியும்
                               பொருந்தா னாகித்
தையலாள் பங்கன் மேனாள் சாற்றி தகைமைக் கேது
செய்யலா நம்மால் என்னத் திகைத்திருந் துரைக்க லுற்றான்.

     (இ - ள்.) மையல் ஆற்றிய குணத்து மாதவர் உரைப்பக் கேட்டு -
மயக்கம் அவித்த குணமுடைய சிறந்த முனிவர் கூறச் சந்திரதயன் கேட்டு,
பொய் இலா மொழியால் உள்ளம் பொருந்தியும் பொருந்தானாகி -
அவ்வுண்மை உரையால் மனம் இசைந்தும் இசையானாகி, தையலாள்
பங்கன் மேல் நாள் சாற்றிய தகைமைக்கு - உமை யொருபாகனாகிய
சிவபெருமான் முன்னாளில் உறுதியாக உரைத்த தகுதிக்கு, நம்மால் ஏது
செய்யலாம் எனத் திகைத்திருந்து உரைக்கலுற்றான் - நம்மால் யாது செய்ய
இயலும் என்று மனந்திகைத்துச் சிறிது இருந்து பின் கூறலாயினான்.

     உரைக்கலுற்றான் - ஒருசொன்னீர்மைத்தாய் நின்றது. தையலாள்
பங்கன் சாற்றியது - சந்திரமதி பிறந்ததும் கழுத்தில் பொன்னாண்
தோன்றியது. யாவரும் வியந்தனர். சிவபெருமான் தோன்றி "இனி இஃது
எவருக்கும் தோன்றாது. இதனை எவன் காண்கிறானோ அவனே
இவளுக்கு நாயகன்" என்றான். இதுவே.
                                                    (42)

 
  மதிதயன் 'அரிச்சந்திரன் வரின் அறியலாம்' என்றல்
147. மூவரா யவரின் முன்னா மூர்த்தியார் அருளிச் செய்த
தேவரா சியமொன் றுண்டா மன்னது தெரிய வல்லார்