பக்கம் எண் :


79

யாவரா யினும்யான் பெற்ற விளங்கொடி தனக்குக் கேள்வர்
ஆவரா லவனிங் கெய்தின் அறியலாம் அழையும் என்றான்.

     (இ - ள்.) மூவராய் அவரின் முன்னாம் மூர்த்தியார் அருளிச்
செய்த - உருத்திரன் மால் அயன் என மூவராகி அம்மூவர்க்கும்
முதல்வனாகிய அருளுருவமுடைய சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளிய,
தேவராசியம் ஒன்று உண்டாம் - தேவ மறைமொழி ஒன்று உண்டு,
அன்னது தெரிய வல்லார் யாவராயினும் - அதனை அறியக்கூடியவர்
எவராயிருந்தாலும், யான் பெற்ற இளங்கொடி தனக்குக் கேள்வர்
ஆவரால் - அவர் நான் பெற்றெடுத்த இளங்கொடி போன்ற சந்திரமதிக்குக்
கணவர் ஆவர் ஆகையினால், அவன் இங்கு எய்தின் அறியலாம்
அழையும் என்றான் - அந்த அரிச்சந்திரன் இங்கே வந்தால் அவன்
நாயகனா என்பதைத் தெரியலாம் அவனை அழையுங்கள் என்று
சொன்னான்.

     "விண் முதல் பூதலம் படைத்து அளித்து அழிப்ப
மும்மூர்த்திகளாகியனை" என்ற தேவாரத்தானும், "தேவர்கோ அறியாத
தேவதேவன் செழும் பொழில்கள் பயந்துகாத் தளிக்கும் மற்றை
மூவர்கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி" என்ற திருவாசகத்தானும்
மூவராய் அவரின் முன்னாம் மூர்த்தி சிவபெருமான் என்பது தெரிக.
இளங்கொடி : பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
                                                    (43)

 
    சந்திரமதி சுயம்வரம் குறித்த ஓலை விடுத்தல்
148.

அரசையிங் கழையும் என்ன அகமகிழ்ந் துவகை கூர்ந்து
விரைவுட னெழுந் திருந்து வேதமா முனிவர் போனார்
இருநிலத் தரசர்க் கெல்லாம் சுயம்வரம் ஏழு நாளென்
றுரைசெயும் என்று தூது மோலையும் போக விட்டான்.

     (இ - ள்.) அரசை இங்கு அழையும் என்ன - அரிச்சந்திரமன்னனை
இங்கே அழையுங்கள் என்று சந்திரதயன் கூற, வேத மா முனிவர் அகம்
மகிழ்ந்து உவகை கூர்ந்து விரைவுடன் எழுந்திருந்து போனார் - மறை
வல்ல சிறந்த முனிவர்கள் மனமகிழ்ந்து மிகுந்த விருப்பத்தோடு விரைந்து
இருக்கை நின்று எழுந்திருந்து போனார்கள், இரு நிலத்து அரசர்க்கு
எல்லாம் சுயம்வரம் ஏழு நாள் என்று உரை செயும் என்று தூதும்
ஒலையும் போக விட்டான் - சந்திரதயன் பேருலகிலுள்ள அரசர்கள்
யாவர்க்கும் தன் மகளுக்கு இற்றைக்கு ஏழாவது நாள் சுயம்வரம் என்று
செய்தி சொல்லும்படி தூதுவரை விடுத்தான்; திருமுக ஓலைகளையும்
அனுப்பினான்.

     எழுந்திருந்து - எழுந்திரு : பகுதி; உரை செயும் - சொல்லும்; இது
முன்னிலைப்பன்மையேவல் வினைமுற்று. இரு நிலம் : பண்புத் தொகை.
                                                    (44)

 
            பன்னாட்டு மன்னர் வருகை
149. தொழுங்கழன் மன்னர் மன்னன் றூதர்சென் றுரைத்த போதே
அழுங்கிய ஆசை யோடும் அளவிலா உவகை யோடும்