|
|
செழுங்குடை
மன்ன ரெல்லாம் தேசமும் நகரும் நீங்கி எழுங்கடல் வளைந்த தென்ன ஈண்டிவந் தடைந்தார்
அன்றே. |
(இ
- ள்.) தொழுங் கழல் மன்னர் மன்னன் தூதர் சென்று உரைத்த
போதே - மன்னர் முடி தோய்ந்து வணங்கத்தக்க வீரக்கழல்களையணிந்த
பேரரசனாகிய சந்திரதயனுடைய தூதர்போய்ச் சுயம்வர நாள் சொன்ன
உடனேயே, அழுங்கிய ஆசையோடும் அளவிலா உவகையோடும் - மிகவும்
வருத்துகின்ற ஆசையோடும் மட்டற்ற மகிழ்ச்சியோடும், செழுங் குடை
மன்னர் எல்லாம் தேசமும் நகரும் நீங்கி - செழுமையான வெண்கொற்றக்
குடையையுடைய அரசர் எல்லாம் நாடும் நகரும் விட்டு, எழுங் கடல்
வளைந்தது என்ன ஈண்டி வந்து அடைந்தார் - பொங்கி எழுகின்ற கடல்
வளைந்ததுபோல் கூடி வந்து சேர்ந்தார்கள்.
அன்று,
ஏ : அசைகள், கழல் : தானியாகுபெயர். எழுங் கடல் :
பெயரெச்சத்தொடர். தொழுங் கழல் என்பதுமது. என்ன : உவம உருபு.
சுயம்வரம் அறிந்தமைபற்றி உவகை. சந்திரமதியை மணக்க வேண்டும்
என்ற ஆசை, எண்ணம் நிறைவுறுமோ நிறைவுறாதோ என்ற வருத்தம்
இவைகளுடன் வந்தடைந்தார் என்க.
(45)
| |
மன்னர்
படைகள் வந்து தங்குதல் |
| 150. |
சோலைக
டோறும் நன்னீர்ச் சூளிகை தோறும் தேவர்
ஆலயம் தோறும் மாதர் அரங்குகள் தோறும் மாட
மூலைக டோறும் சீர்சான் முன்றில்கள் தோறும் ஏம
சாலைக டோறும் மன்னர் தானைவந் திறுத்த தன்றே. |
(இ - ள்.)
சோலைகள் தோறும் நன்னீர்ச் சூளிகை தோறும் தேவர்
ஆலயம் தோறும் மாதர் அரங்குகள் தோறும் - அயோத்தி நகரின்
சோலைகள் நல்ல தண்ணீர் நிறைந்த குளக்கரைகள் கோயில்கள்
பெண்களின் ஆடல் அரங்குகள் இவைகளிலும், மாடம் மூலைகள் தோறும்
சீர் சால் முன்றில்கள் தோறும் - மாடங்கள் மூலைமுடுக்குகள் சிறப்பு
நிறைந்த முற்றங்கள் இவைகளிலும், ஏம சாலைகள் தோறும் - காவல்
மிகுந்த சாலைகளிலும், மன்னர் தானை வந்து இறுத்தது - அரசர்களின்
சேனைகள் வந்து தங்கின. அன்று, ஏ : அசை.
தோறும் : எண்ணிடைச்சொல். சூளிகை - நீர்க்கரை
ஏம சாலை -
பொற்களஞ்சியமும் ஆம். மன்னர் நெருக்கமாக வந்து கூடினர். இருக்க
இடமின்றிப் பொற்களஞ்சியத்தினும் புகுந்து தங்கினர் எனக் கொள்க.
(46)
| 151. |
மானைவென்
றடருங் கண்ணாள் மணமகன் வருமுன் வந்த
ஏனைய வேந்தர்க் கெல்லாம் இமையவர்க் கறிய வொண்ணா
யானையும் தேரு மாவும் மாதரும் அமைச்சர் தாமும்
சேனையும் அளவிட் டார்க்கும் செப்பலாந் தகைமைத் தன்றே. |
|