பக்கம் எண் :


81

     (இ - ள்.) மானை வென்று அடருங் கண்ணாள் மணமகன் வருமுன்
வந்த - மருண்ட பார்வையில் மானை வென்று செவ்வரி படர்ந்த கண்களை
யுடைய சந்திரமதியின் கணவனாகிய அரிச்சந்திரன் வருவதற்கு முன்னதாக
வந்த, ஏனைய வேந்தர்க்கு எல்லாம் - மற்ற எல்லா அரசர்களுக்கும்,
இமையவர்க்கு அறிய ஒண்ணா யானையும் தேரும் மாவும் மாதரும்
அமைச்சர் தாமும் சேனையும் - தேவர்களாலும் அளவிட முடியாத
யானையும் தேரும் குதிரையும் பெண்களும் மந்திரகளும் சேனைகளும்,
ஆர்க்கும் அளவிட்டுச் செப்பலாந் தகைமைத்து அன்று - எப்படிப்
பட்டவர்க்கும் அளவிட்டுச் சொல்லுந் தரத்தது அன்று.

     ஒண்ணா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; இமையவர்க்கும்
என்ற சிறப்பும்மை தொக்கது. யானையும் முதலிய உம்மைகள்
எண்ணும்மை. ஆர்க்கும் - யாவர்க்கும் என்றதன் மரூஉ. ஏகாரம் :
ஈற்றசை.
                                                    (47)

 
     முனிவர் அரிச்சந்திரனைக் காண்டல்
152. இந்நகர் முழுதும் மன்னர் ஈண்டிய பின்ன யோத்தி
நன்னகர் தன்னில் புக்கார் நற்றவ முனிவர் எல்லாம்
மன்னவன் எழுந்தி ருந்து வணங்கிவாய் புதைத்து நீங்கள்
சொன்னதும் கேட்ட வாறும் சொல்லுமென் றெடுத் துரைத்தான்.

     (இ - ள்.) இந் நகர் முழுதும் மன்னர் ஈண்டிய பின் - இந்தச்
சந்திரதயனது நகரின் எல்லா இடங்களினும் அரசர்கள் வந்து கூடிய பின்பு,
நல் தவ முனிவர் எல்லாம் அயோத்தி நல் நகர் தன்னில் புக்கார் - நல்ல
தவமுனிவர்கள் எல்லாரும் அயோத்தி என்ற நல்ல நகரில் போனார்கள்,
மன்னவன் எழுந்திருந்து வணங்கி வாய் புதைத்து நீங்கள் சொன்னதும்
கேட்டவாறும் சொல்லும் என்று எடுத்து உரைத்தான் - அரிச்சந்திரன்
எழுந்திருந்து வணங்கி வாயைப பொத்திக் கொண்டு 'நீங்கள்
சந்திரதயனிடம் சொன்னதும் ஏற்றுக்கொண்டு பதில் உரைத்த வாறும்
சொல்லுங்கள்' என்று எடுத்து மொழிந்தான்.
     கேட்டல் - நட்பாய் ஏற்றுக்கொள்ளுதல்.

     "கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
     வேட்ப மொழிவதாஞ் சொல்"

என்ற குறட்பாவில் 'கேட்டார்' என்னுஞ் சொற்குப் பரிமேலழகர் கூறிய
உரையிலும் இப்பொருள் காண்க.
                                                    (48)

 
  முனிவர் மதிதயன் கருத்தினைப் பொருத்திக் கூறுதல்
153.

அருந்தவ முனிவர் எல்லாம் அரசனை நோக்கி யைய
பெருந்தவம் உடையார் மண்ணி னீயலாற் பிறரும் உண்டோ
திருந்திழை தனையு னக்கே திருமண முடிக்கத் தாதை
பொருந்தினன் வல்லை நீயும் எம்முடன் போது கென்றார்.