|
செல்க என்னா மொழிந்து
- அரசர்களும் மந்திரிகளும் சேனைகளும்
பெண்களும் முன்னமே செல்க என்று கூறி, சூதனைக் கண் சாத்தி -
தேர்ப்பாகனை நோக்கி, வன்ன மா மணித் தேர் கொண்டு வருக என
அருளிச் செய்தான் - 'அழகுபொருந்திய பெரிய மணிகள் ஒலிக்கின்ற
தேரைக் கொண்டு வருக' என்று குறிப்பாற் கட்டளையிட்டான்.
முன்னர்,
அர் : பகுதிப்பொருள் விகுதி; கன்னல் + அம் - அம் -
அழகு : சாரியையும் ஆம். என்னா - என்று கூறி. வருக + என =
வருகென அகரங் குறைந்துநின்றது : தொகுத்தல் விகாரம். அருளிச்
செய்தான். கூறினான் இது உயர்ந்தோர்கள் செயலைக் கூறு முறை.
(51)
| |
பாகன்
தேர் கொண்டு வருதல்
கலி விருத்தம் |
| 156. |
மாதங்
கம்மடங் கல்வயப் பரிமா
பூதம் பலதே ரொடுபூண நிறீஇச்
சூதன் கொடுவந் துசுடர்க் கழலோன்
பாதங் களின்மீ துபணிந் தனனே. |
(இ - ள்.)
சூதன் மாதங்கம் மடங்கல் வயப் பரி மா பூதம் பல
தேரொடு பூண நிறீஇ - தேர்ப்பாகன் யானைகளையும் பல சிங்கங்களையும்
அநேகம் வெற்றிபொருந்திய குதிரைகளையும் பல பூதங்களையும் அந்தத்
தேரிலே பூட்டியும் அணிபெறக் கட்டி நிறுத்தியும், கொடு வந்து - கொண்டு
வந்து, சுடர்க் கழலோன் பாதங்களின் மீது பணிந்தனன் - ஒளிபொருந்திய
வீரக்கழல்கள் அணிந்த அரிச்சந்திரன் அடிகளில் விழுந்து வணங்கினான்.
குதிரைகளைப் பூட்டியும் ஏனையவற்றின் உருவங்களை
வரைந்து
காட்டியும் அழகுபெறத் தேரில் நிறுத்தியும் எனக் கொள்க; கொடு :
தொகுத்தல், ஏகாரம் : ஈற்றசை. சூதன்
- தேர்ப்பாகன். மாதங்கம் -
யானை, மடங்கல் - சிங்கம்.
(52)
| |
அரிச்சந்திரன்
தேரேறிச் செல்லல் |
| 157. |
வாரே
றுசெழுந் தடமா முரசும்
நீரே றியசங் கமுநின் றதிரத்
தாரே றுபுயங் கள்ததும் பநெடும்
தேரே றிவிரைந் துசெலுத் தினனே. |
(இ
- ள்.) வார் ஏறு செழுந் தட மா முரசும் - தோல் வாரால்
இறுகக் கட்டப்பட்ட பேரொலி முழங்கும் பெரிய முரசும், நீர் ஏறிய
சங்கமும் - மங்கலத்தன்மை மிகுந்த சங்கும், நின்று அதிர - நெடுநேரம்
முழங்க, தார் ஏறு புயங்கள் ததும்ப - மாலைகள் மிகுந்த தோள்கள்
அசைய, நெடுந் தேர் ஏறி விரைந்து செலுத்தினன் - பெரிய தேர் மேல்
ஏறி விரைவாகச் செலுத்தினான்.
|