|
(இ
- ள்.) வன்னக் குவி மா முலை வல்லியரும் - அழகிய குவிந்த
முலைகளையுடைய வல்லிக்கொடிபோன்ற பெண்களும், கன்னல் சிலை
வேள் அன காளையரும் - கருப்பு வில்லையுடைய மன்மதனை ஒத்த
ஆடவரும், அன்னத் திரளோடு அரியின் திரள் வந்து என்ன - அன்னப்
பறவைக் கூட்டத்தோடு சிங்கக் கூட்டமும் வந்ததுபோல எங்கணும் கடிது
எய்தினர் - எல்லா இடங்களிலும் விரைந்து வந்து சேர்ந்தார்கள்.
அன
: அன்ன என்ற உவம உருபின் தொகுத்தல்; வந்தது என்ன
என்பது வந்தெனக் குறைந்தது உவமையணி. நிரனிறையணியுடன் கலந்தது,
கலவையணி. கன்னல் - கரும்பு.
(56)
| |
வசிட்டன்
வருதல் |
| 161. |
சிறையோ
திமமேல் வருதே வனெனப்
பொறையோ டொளிர்வெண் சிவிகைப் பொலிவுற் றிறையோ னொடமைச் சரிறைஞ் சிடமா
மறையோ திவசிட் டனும்வந் தனனே. |
(இ - ள்.)
சிறை ஓதிமம் மேல் வரு தேவன் என - இறகுகளை
யுடைய அன்னவாகத்தின்மேல் வருகின்ற பிரமதேவனைப்போல்,
பொறையோடு ஒளிர் வெண் சிவிகைப் பொலிவுற்று - சுமப்பவர்களுடன்
விளங்குகின்ற வெண்மையான பல்லக்கில் விளக்கமாக இறையோனொடு
அமைச்சர் இறைஞ்சிட - அரசனாகிய அரிச்சந்திரனும் அமைச்சர்களும்
வணங்க, வசிட்டனும் மா மறை ஓதி வந்தனன் - வசிட்ட முனிவனும் சிறந்த
வேதங்களை ஓதிக்கொண்டு வந்தான்.
வசிட்டன் சிவிகையில் ஏறி வந்தான். அவன் சிவிகை தாங்குவோரும்
பெருமையோடு விளங்கினர். பொறை : தொழிலாகுபெயராய்த்
தாங்குபவரைக் குறித்தது. இறையோன் ஒடு. இதில் ஒடு எண்ணுப்பொருளில்
வந்தது. ஏகாரம் : ஈற்றசை. உம்மை
: உயர்வு சிறப்பு. மறை - பொறை.
யோடு : இதில் ஓடு கருவிப்பொருளில் வந்தது. சிவபெருமானது
பெருமையை இலைமறை காய் போலப் பொதிந்து வைத்தலின்
வேதங்களுக்குக் காரணப்பெயராயிற்று. பிரம தேவன் நான்முக
வாயினாலும் நால்வேதங்களை ஓதி வருதல் போல் வசிட்டனும் தனது
ஒரு வாயான் ஓதிவந்தான் என்பதாம்.
(57)
| |
பரி
கரியுடன் படை செல்லல் |
| 162. |
தரைசேர்
கடலொத் தனதா னைசுடற்
றிரைபோ லநடந் தனதிண் பரிமா
விரைசே ரருவித் திரள்வீழ் பலமால்
வரைபோ லகடந் தனவா ரணமே. |
(இ
- ள்.) தானை தரை சேர் கடல் ஒத்தன - சேனைகள் பூமியில்
வரும் கடலைப்போன்று இருந்தன. திண் பரி மா கடல் திரை போல
நடந்தன - வலிமையான குதிரைகள் கடலில் வரும் அலைபோல நிரை
நிரையாய்
|