|
| |
வெண்
சாமரையும் வெண்டுகிற் கொடியும் |
| 165. |
ஆதித்
தனருங் குலமன் னவர்தந்
நீதிப் புகழெங் குநிறைந் ததெனச்
சோதிக் கவரித் தொகையுங் கொடியும்
வீதித் தலைதோ றுமிடைந் தனவால். |
(இ
- ள்.) ஆதித்தன் அருங் குல மன்னவர் நீதிப் புகழ் எங்கும்
நிறைந்தது என - சூரியயகுல மன்னரின் நீதியின் புகழ் எங்கும் பரவியது
போல, வீதித் தலை தோறும் சோதிக் கவரித் தொகையும் கொடியும்
மிடைந்தன - இவர்கள் போகின்ற தெருக்களிலெல்லாம் ஒளிபொருந்திய
சாமரைக் கூட்டமும் கொடிகளும் நெருங்கின.
உவமையணி.
ஆல் : அசை; நீதிப்புகழ் : ஏதுப்பொருட்கண் வந்த
ஐந்தனுருபு தொக்கது.
(61)
| |
பரி
கரி தேர்ப் படைச் சிறப்பு |
| 166. |
காற்றோ
டுநிகர்த் தகடும் பரிவா
னேற்றோ டுநிகர்த் தனயா னைவரைக்
கூற்றோ டுநிகர்த் தனதேர் குலவும்
ஆற்றோ டுநிகர்த் தவனீ கமரோ.
|
(இ
- ள்.) கடும் பரி காற்றோடு நிகர்த்த - வேகமுடைய குதிரைகள்
காற்றைப்போன்றன, யானை வான் ஏற்றோடு நிகர்த்தன - யானைகள் கரிய
தோற்றத்தாலும் பெரு முழக்காலும் மேகத்தையும் அதன் முழக்கத்தையும்
போன்றன. தேர் வரைக் கூற்றோடு நிகர்த்தன - தேர்கள் உயரத்தாலும்
உருவத்தாலும் மலைகளின் சரிவுகளை ஒத்திருந்தன, அனீகம் குலவும்
ஆற்றோடு நிகர்த்த - சேனைகள் ஓட்டமுற்று விளங்குகின்ற ஆறுகளை
ஒத்திருந்தன.
அரோ
: அசை; சேனைகளின் ஒழுங்கான போக்கிற்கு
ஆற்றொழுக்கும், தேர்களின் அகன்ற அடிக்கும் ஒடுங்கிய உச்சிக்கும்
மலையும் சிறந்த உவமைகள் ஆயின.
(62)
| |
மழு
வாள் முதலிய ஆயுத வரிசை |
| 167. |
மழுவும்
கரவா ளமும்வார் சிலையும்
எழுவும் குலிசங் களுமே திகளும்
கொழுவும் வளையும் பலகுந் தமுநீண்
முழுவெஞ் சுடர்வேல் களுமொய்த் தனவால். |
(இ - ள்.)
மழுவும் கர வாளமும் வார் சிலையும் எழுவும்
குலிசங்களும் - மழுப் படைகளும் கை வாள்களும் நீண்ட விற்களும்
தூண் போன்ற தண்டங்களும் வச்சிராயுதங்களும், ஏதிகளும் கொழுவும்
வளையும் பல குந்தமும் நீள் முழு வெஞ் சுடர் வேல்களும் மொய்த்தன
- வாளும் கொழுக்களும் சக்கரங்களும் அநேக கை வேல்களும் நீளமான
வெப்பம் நிறைந்த ஒளிபொருந்திய வேல்களும் நெருங்கின.
|