|
சீர்கொள்வார்
புன்சொல்லும் செஞ்சொல்லும் சேர்ந்தொன்றிற் சேரப் புன்சொல்
ஆர்கொள்வார் என்பதுசற் றறியாமற் சிறியேன்நா
வசைக்கின் றேனே. |
(இ
- ள்.) பாலோடு நேர் உற்றால் நீர் கொள்வார் - பாலும் நீரும்
சமமாகக் கலந்திருந்தாலும் தண்ணீரை விலைகொடுத்து வாங்குவார்,
நெல்லோடு உற்றால் பதர் கொள்வார் - நெல்லோடு விரவியிருந்தால்
பதடியையும் நெல்லோடு சேர்த்து வாங்குவார், பூ உற்றால் நார்
கொள்வார் - பூவோடு சேர்க்கப்பட்டிருந்தால் நாரையும் விலைக்கு
வாங்குவார், அதிற் சிறிது நறை உண்டாயின் வேர் கொள்வார் - வெட்டி,
விலாமிச்சை போலச் சிறிது மணமிருக்குமானால் வேரையும் விலைக்கு
வாங்குவர் (அதுபோல) புன் சொல்லும் செஞ்சொல்லுஞ் சேர்ந்து ஒன்றின்
சீர் கொள்வர் - என் புன்சொற்களும் நன்சொற்களோடு கலந்து வருமாயின்
நன்சொல் காரணமாக என் புன்சொற்களையும் ஏற்றுக்கொள்வர், சேரப்
புன்சொல் யார் கொள்வார் என்பது சற்று அறியாமல் சிறியேன் நா
அசைக்கின்றேன் - ஒருசேர எல்லாச் சொற்களும் புன்சொற்களாயின்
எவரும் கொள்ளமாட்டார் என்பதைச் சிறிதும் உணராமல் சிற்றறிவினனாகிய
நான் பாடத் தொடங்குகிறேன்.
எடுத்துக்
காட்டுவமையணி. யாவர் என்னும் வினாப் பெயர் யார்
என்றாய் இலர் என்பது குறித்துநின்றது. சற்றும் : உம்மை தொக்கது.
ஏகாரம் :
ஈற்றசை.
கவி
தம் சொற்கள் பாலோடு சேர்ந்த நீரும் நெல்லோடு சேர்ந்த
பதரும் போல, நன்சொல்லும் புன்சொல்லும் கலந்தன வல்ல என்று கூறினர்.
எல்லாம் புன்சொல்லே என்று தம் சொற்களை இழிவுபடுத்தி அவையடக்கங்
கூறினர் எனக் காண்க.
(11)
|
அறிஞர்க்கு
அறியார் அறிவுரை பகர்தல் போன்றதென
அவையடக்கங்
கூறுகிறார்
|
12. |
புருடனார்க்
கேந்திழையார் பொருள்உரைப்ப தெனப்பிறர்தம்
பொருளே வௌவுந்
திருடனார் மேலவருக் கறம்உரைப்ப தெனச்சிறிய
தெள்கு துள்ளிக்
கருடனார்க் குப்பறவை கற்பிப்ப தெனஅனந்தம்
கண்ணுள் ளார்க்குக்
குருடனார் வழிகாட்டல் எனப்பெரியோர் முன்சிறியேன்
கூறல் உற்றேன். |
(இ
- ள்.) புருடனார்க்கு ஏந்திழையார் பொருள் உரைப்பது என - நாயகனுக்கு
மனைவி ஞானப்பொருள் உணர்த்துவது போலவும், பிறர்தம் பொருளே வௌவும் திருடனார் மேலவருக்கு
அறம் உரைப்பது என -
|