|
| |
பெண்களின்
கற்புறுதி |
| 175. |
அரனார் முனியா
மதனன் னவர்தோள்
பரநா ரியர்கொங் கைபடப் படமுன்
ஒருநா ளுளவா நிறையொண் ணுதல்பால்
வருநாண்மனுநீ திவழங் கிலதே. |
(இ
- ள்.) அரனார் முனியா மதன் அன்னவர் தோள் -
சிவபெருமானாற் சினந்தெரிக்கப்படாத காமனைப்போன்ற காளையர்
மார்பில், பரநாரியர் கொங்கை பட பட - அயல் மங்கையர் கொங்கைகள்
பட்டுப்பட்டு வருந்த, நிறை ஒண்ணுதல் பால் வரு நாள் - கற்புடைய
ஒளிபொருந்திய நெற்றியையுடைய சந்திரமதி இடத்திற்கு நகரமக்கள்
யாவரும் கூடி வருநாளாகிய, ஒருநாள் உள ஆம் - ஒரு நாளில்
உள்ளனவாம் (அது கற்பு நெறிக்கு வழுவன்று என்று). மனுநீதி வழங்கிலது
- மனுவாற் கூறிய நீதிநூலிற் கூறப்பட்டிலது (இவ்வாறு நேர்ந்ததற்கு நீதிநூல்
விதி எங்குளதோ யானறியேன்).
திருக்கோயில்
வழிபாட்டிலும் திருவிழாக் கூட்டத்திலும் அயலாடவர்
அயன் மாதர்கள் நெருக்கமாகச் சென்றாற் கற்பு நெறிக்கு வழுவாகாது
எனக் கூறியிருக்கின்றது நீதிநூல். சந்திரமதி இடத்திற்கு அரிச்சந்திரன்
செல்வான்; அவனோடு கூடி நகரமக்களனைவரும் செல்வர்; அவ்வாறு
செல்லும் ஒரு நாள் வரும். அந்நாளில் அயலாடவர் மார்பும் அயன்
மங்கையர் கொங்கையும் பொருந்தும். அது கற்பு நெறிக்கு வழுவன்று
என்று சிறப்புவிதி மனுநூலிற் கூறவில்லை. கூறியிருப்பின், இதனைச் சிறந்த
நெறியென்று யான் கூறுவேன். மனு நீதி கூறாததால் இதனை யான் கற்பு
நெறியா. நெறியன்றா? என்பது என் கருத்துக்குப் புலப்பட்டிலது என்று
ஆசிரியர் கூட்டத்தின் சிறப்புக் கூறினர் எனக் கொள்க. படப்பட வருநாள்,
நிறையொண்ணுதல்பால் வருநாள், ஒருநாள் உளவாம் (என்று) மனுநீதி வழங்கிலது எனக் கூட்டுக.
'என்று' என்னும் சொல் வருவிக்கப்பட்டது.
"அரனார் முனியா மதன்" எனவே 'நெற்றிக்கண்ணா லெரிக்கப்படாத'
காமன் (உருவமுடைய காமன்) என்பது விளங்கிற்று.
(71)
யானையினின்றும்
விழுந்த பெண்ணை இளவல் கைதூக்கி விடுதல்
| 176. |
வெளிறுஞ்
சுடர்வே லிளவே ளனையான்
பிளிறுங் கரிதுள் ளவிழுந் துபெயர்ந்
தொளிருந் தனவல் லியொருத் தியையக்
களிறென் றிருகை கொடுகட் டினனே. |
(இ - ள்.)
வெளிறும் சுடர் வேல் இள வேள் அனையான் -
வெள்ளிய ஒளிவீசுகின்ற வேலைத் தாங்கிய கையையுடைய இளைமையான
மன்மதனைப் போன்றவன் ஓர் ஆடவன், பிளிறும் கரி துள்ள - பிளிறி
யொலிசெய்யும் யானை தாவி விரைந்து செல்ல, விழுந்து பெயர்ந்து ஒளிரும்
தனவல்லி ஒருத்தியை - அதனாற் கீழே விழுந்து பெயர்ந்து நின்று
விளங்கும் தனங்களையுடைய ஒரு பெண்ணினை, அக் களிறு என்று இரு
கை கொடு கட்டினன் - அவ் யானை யென்று கருதி இரண்டு கைகளாலும் பற்றினன். ஏ : அசை.
|