|
| |
கதிரோன்
மறைவு |
| 179. |
தோய்கதிர்
வேற்படை சூழ்ந்து துன்னிட
ஆய்கதிர் முடியினா னாற்றை நண்ணினான்
பாய்கதிர்ப் படலையுட் சுருக்கிப் பையவே
காய்கதிர்ச் செல்வனும் கடலை நண்ணினான். |
(இ
- ள்.) தோய் கதிர் வேல் படை சூழ்ந்து துன்னிட - ஒளி
தோய்ந்த வேல் வீரர்கள் சூழ்ந்து நெருங்கிட, ஆய் கதிர் முடியினான்
ஆற்றை நண்ணினான் - ஆராயும் ஒளிபொருந்திய முடியினையணிந்த
அரிச்சந்திரனும் ஆற்றினை அடைந்தான் (அடைந்தபோது), காய்கதிர்ச்
செல்வனும் - எரிகின்ற கதிர்களையுடைய சூரியனும், பாய்கதிர்ப் படலை
உள் சுருக்கிப் பையவே கடலை நண்ணினான் - பரந்த கதிர்க்கூட்டங்களை
உள்ளே சுருக்கிக்கொண்டு மெதுவாக மேலைக் கடலில் போய்
அடைந்தான்.
அரசன்
ஆற்றை அடைந்தான். பொழுதும் அடைந்தது. தோய் கதிர்,
பாய் கதிர், காய் கதிர், ஆய்கதிர் எல்லாம் வினைத்தொகைகள். படலை -
கூட்டம், தொகுதி. ஆய் கதிர் முடி - ஆராய்வதற்கிடமான ஒளிபொருந்திய
முடி. எனவே, அம்முடியை நோக்கினார். இஃது எவ்வகை மணிகளாற்
செய்யப்பட்டதோ, பலவகை யொளி கலந்ததா யிலங்குகின்றதே என்று
ஐயுற்று நோக்கி யாராய்ந்து பார்ப்பதற்குத் தக்க முடி என்று கொள்க.
(75)
| |
எல்லோரும்
ஊர்திவிட் டிறங்குதல் |
| 180. |
ஆழவேழ்
கருங்கட லதனின் வெய்யவன்
வீழலும் மன்னனும் வேந்தர் மக்களும்
ஏழையர் யாவரும் இரத மும்கட
வேழமும் சிவிகையும் விட்டிறங் கினார். |
(இ - ள்.)
வெய்யவன் ஆழம் ஏழ் கருங்கடல் அதனின் வீழலும் -
சூரியன் ஆழமான ஏழு பெருங்கடலில் இறங்கி மறைந்தவுடன், மன்னனும்
வேந்தர் மக்களும் ஏழையர் யாவரும் இரதமும் கட வேழமும் சிவிகையும்
விட்டு இறங்கினார் - அரிச்சந்திரனும் ஏனைய அரசரும் ஆடவரும்
பெண்களும் ஆகிய யாவரும் தேர் மதயானைகள் பல்லக்குகள் இவைகளை
விட்டு இறங்கினார்கள்.
சூரியன் வானின்று இறங்குதலும், மக்கள் ஊர்தியினின்று
இறங்கலும்
ஒருங்குநிகழ்ந்தன என்பதாம். கடல் எழுவகையாகப் பிரிக்கப்படுதலின் 'ஏழ்
கருங்கடல்' என்றார். ஏழையர் - மங்கையர். மக்கள் என்றது ஆடவரை
மட்டும் குறித்தது; பின் ஏழையர் என வந்த குறிப்பினால்.
(76)
| |
மன்னனும்
படையும் வண்டலின் வதிதல் |
| 181. |
மண்டல
வேந்தரும் மாத ரீட்டமும்
திண்டிற லமைச்சரும் சேனை வெள்ளமும் |
|