பக்கம் எண் :


 சக்கராயுதன் முத்திச் சருக்கம் 351


 

அகழுக்கு -  மஹாலவண    சமுத்திரமும்,  மதிலுக்கு  -    அதன்
வஜ்ரவேதிகையும்,  வீதிகளுக்கு  -  மஹாநதிகளும்,  உப்பரிகையின்
வரிசைகளுக்கு  -  குலகிரிபர்  வதங்களும்,  இராஜ  மாளிகைக்கு -
மஹம்மேரு பர்வதமும், உவமையாகச் சொல்லப்பட்டதால், அந்நகரம்
இவைகளை யெல்லாமுடை  ஜம்பூத்வீபத்திற்கு  ஒப்பாக  வர்ணித்துச்
சொல்லப்பட்டது. (2)

 751. தோகையனை யார்கணட மாடுமிட மொருபால்
     பாகமதி நுதலியர்கள் பாடுமிட மொருபால்
     மேகமென வேகமுடை நாகநிலை யொருபால்
     பூகமுத லாயமலி புறம்பணைய தொருபால்.

   (இ-ள்.)ஒரு பால் -   அந்நகரத்தில்  ஒரு  பக்கத்தில்,  தோகை
யனையார்கள் - ஆண்மயிலுக்குச் சமானமாகிய  சரீரச்சாயலையுடைய
நர்த்தனமாதர்கள்,   நடமாடும்  -  நர்த்தனமாடும்படியான,  இடம் -
நர்த்தன சாலைகளாகும், ஒரு பால் - மற்றொரு பக்கத்தில், பாகமதி -
(பதினைந்தில் மூன்று பாகமாகிய)  மூன்றாம் பிறைச்சந்திரன் போன்ற,
நுதலியர்கள் - நெற்றியையுடைய மாதர்கள், பாடும் - சங்கீதங்களைப்
பாடும்படியான,  இடம் -   ஸ்தானமாகும்,  ஒரு  பால்  - வேறொரு
பக்கத்தில்,   மேகமென   -     மேகத்தைப்போன்ற,  ( அதாவது :
மேகம்போற்  கறுப்பு நிறமுடைய), வேகமுடைய - மிகுதியான கோப
வேகமுடைய,    நாக    நிலை    -    யானை   கட்டும்படியான
யானைச்சாலையாகும், ஒரு பால் - மற்றொரு பக்கத்தில், பூகமுதலாய
-    கமுகு    விருட்சம்    முதலாகிய    விருட்சங்கள்,    மலி -
நிறைந்திருக்கின்ற, புறம் - நகர  பாகியத்தைச்  சார்ந்த, பணையது -
மருத நிலமாகும், எ-று. (3)

 752. வர்னினைய ளந்துவரும் வாசிநிலை யொருபா
     லூனுறையும் வேற்படை யடைக்குமிட மொருபாற்
     றேனுலவு கூந்தலவர் திளைக்குந்தெரு வொருபா
     லானைமிசை வரும்வணிக ரவரிடங்க ளொருபால்.

    (இ-ள்.) வானினை    -  ஆகாயத்தை,  அளந்து  -  அடியால்
அளந்து,   வரும்   -  வரும்படியான  வேகமான  நடையையுடைய,
(அதாவது :  வேகத்தால்  ஆகாயத்தில்  தாவிச்சென்று  வரக்கூடிய),
வாசி  நிலை -  குதிரைகள் நிற்கும்  சாலையானது, ஒரு பால் - ஒரு
பக்கத்திலே   இருக்கும்,   ஊனுறையும்   -   பகைவர்    மாம்சம்
தங்கியிருக்கின்ற,  வேல் - வேல் முதலாகிய, படை - ஆயுதங்களை,
அடைக்கும் - சேர்த்து வைக்கும், இடம் - ஆயுதச்சாலையானது, ஒரு
பால் -   ஒரு   பக்கத்திலேயேயிருக்கும்,   தேனுலவு    -   (மலர்
மாலையிலுள்ள    மதுவை   யுண்ணுதற்கு   நெருங்கி)   வண்டுகள்
உலாவுகின்ற,  கூந்தலவர் -  அளகபாரத்தையுடைய  பொது  மகளிர்,
திளைக்கும் - நெருங்கியிராநின்ற, தெரு - வீதிகள், ஒரு பால் - ஒரு
பக்கத்திலேயிருக்கும்,