டும் - வண்டுகளும், தேனும் -
தேனினங்களும், பாட - கீதங்கள்
பாட, தாதொடு - பூந்தாதுகளோடு, மதுக்கள் - மது ஜலங்களும், வீயும்
- சொரிகின்ற, தண் - குளிர்ந்த, பணை - மரக்கிளைகள் பொருந்திய,
சோலைத்து - தோப்புகளையுடையதாகிய, உத்தர மதுரையென்னும் -
உத்தரமதுரை யென்கிற பட்டணமானது, உண்டு - உளது, எ-று. (2)
1013. பகற்கிடை கொடாத பைம்பொன் மாளிகைப் பாவை நல்லா
ரகிற்புகை யகத்து நின்றா ரணிவரை யதனைச் சூழ்ந்த
முகிற்கொடி மின்னுப் போன்று தோன்றுவார் குழாமு ழங்கத்
துகிற்கொடி யோடு மஞ்ஞை தொடங்கிய நடங்க ளோவா.
(இ-ள்.) (அந்நகரத்தில்),
துகிற்கொடி - துவஜக்கொடிகளினது,
குழாம் - கூட்டங்கள், முழங்க - அசைதலால் படபடவென்று சப்திக்க,
(அதை மேககர் ஜனையென்று), மஞ்ஞை, மயில்களானவை, தொடங்கிய
- ஆட ஆரம்பித்த, நடங்கள் -
நர்த்தனங்கள், ஓவா -
நீங்காதனவாம், (இன்னும் அந்நகரில்),
பகற்கு - சூரியனுக்கு,
இடைகொடாத - போக இடங்கொடாமல் உன்னதமாகிய, பைம்
-
பசுமையுற்ற, பொன் - பொன்னாலாகிய, மாளிகை - உப்பரிகைகளில்,
அகிற்புகையகத்து - அகிற்புகையினுள், நின்றார் - நின்றவர்களாகிய,
பாவை - சித்திரப் பாவைக் கொப்பாகிய, நல்லார் -
ஸ்த்ரீமார்கள்,
அணிவரையதனை - அழகிய பர்வதத்தை, சூழ்ந்த - சூழ்ந்த, முகில் -
மேகத்தினுளாகிய, கொடிமின்னுப்போன்று - மின்னற் கொடிபோல,
தோன்றுவார் - பிரகாசிப்பார்கள், எ-று.
ஓடு - அசை. (3)
1014. காமனே கவ்வை செய்வான் கரிகளே நிகளம் பெய்வ
தாமமே மெலியும் வண்ணஞ் சங்கரஞ் சிற்பி யர்க்கே
சேமமார் சிறைபு னற்கே தீத்தொழின் மறைய வர்க்கே
வாமமே கலையி னாரே வசியமந் நகரத் துள்ளே.
(இ-ள்.) அந்நகரத்துள்
- அப்பட்டணத்திலே, காமனே -
மன்மதனே, கவ்வை செய்வான் - வருத்தஞ் செய்பவனாவான், (வேறு
வருத்தங்கிடையாது), நிகளம் - விலங்கை, (அதாவது : சங்கிலியை),
பெய்வ - பூட்டிக் கட்டப்பட்டவை, கரிகளே - யானைகளே, மெலியும்
வண்ணம் - வாடும் விதமானது, தாமமே - பூமாலைகளே, சங்கரம் -
கலத்தற்றொழிலானது, சிற்பியர்க்கே -
வர்ணங் கூட்டுகின்ற
சிற்பியர்களுக்கே, சேமம் - காவலால், ஆர் -
நிறைந்த, சிறை -
அணையானது, புனற்கே - ஜலத்துக்கே, தீத்தொழில் - அக்கினியாற்
செய்யும் ஒளபாசனத் தொழிலானது,
மறையவர்க்கே -
பிராம்மணர்களுக்கே, வசியம் - வசம் |