முரிந்த வெண்டிரைக் கருங்கடல் முகட்டினைக் குழித்து விரிந்த வெள்ளநீர் மடுப்புழிக் கரந்துடன் மேவிக் கரிந்தி டத்தனைச் செய்ததீ வடவையின் களவைத் தெரிந்து வில்லுமிழ் தடித்தெனத் திசைதொறுஞ் சிதறி. 4 | கடல்நீரைப் பருகும்வழி தனது வடிவை மறைத்து நீருடன் உட்புகுந்து தன்னைக் கருகச் செய்த வடவானலத்தின் வஞ்சகச் செயலை அறிந்து அதனை வெளியே யுமிழ்தல் போல ஒளியைக் கக்குகின்ற மின்னலாகப் பல திசைகளிலும் வீசி, குழித்து-குழி செய்து (மிகப் பருகி என்னும் குறிப்பிற்று) கடற் பள்ளங்களைக் கப்பற் செலவினர் கூறுப. உடன் மேவி-உடலில் மேவி, உடன் மேவி எனக்கொள்க. தடித்து-மின் கான்ற அக்கனல் மீட்டடை யாவகை கருதி வான்ற னிற்குனி சிலையெனத் தடையினை வயக்கி ஏன்ற நீஇனி எதிர்த்தனை யாயிடின் இன்னே ஊன்ற னோடுயிர் குடிப்பலென் றுருமொலி எழுப்பி. 5 | உமிழப் பெற்ற தீ, மீள அணுகாத உபாயத்தை நாடி, வளைத்த (அம்பேற்றிய) வில்லென இந்திர தனுசை வல்லென விளக்கி, மேலும் பகைத்தனையாயின் அப்பொழுதே உயிரையும், உடலையும் ஒருங்கு பருகுவல் என இடியொலி எழச்செய்து, (தெழித்து-உரப்பி) (இப்பிழை பொறுத்தனன்; இனிப்பிழை பொறேன்) வானில், ஊனொடு எனற்பாலன தன் சாரியை பெற்றன. அடுத்த டுத்தலை மோதுதெண் டிரைப்புனல் அளக்கர் உடுத்த பாரில்உன் கிளையெலாம் முதலற ஒருங்கே படுத்து நின்வலி பாற்றுவன் யானெனப் பகைமை தொடுத்த வஞ்சினங் கொண்டழல் மேல்அமர் தொடங்கி. 6 | அடுத்து மேன்மேல் அலைத்தெழும் கடல் சூழ்புவியில் வடவைத் தீயின் இனமாகிய நெருப்பெலாம் வேரொடும் ஒருசேர அழித்து அவ்வழி அதன் வலிமையைப் போக்கப் பகை பற்றி எழுந்த சபதத்தொடும் போரைச் செய்யத் தொடங்கி, பகை-மை பகுதிப் பொருள் விகுதி; பத்திமைபோல, சினையொடு முதலுக்கு ஒற்றுமை உண்மையின், கிளையை யழித்து முதலின் வலிமையைக் குறைத்தல் பேசப்பெற்றது. |