பக்கம் எண் :


154காஞ்சிப் புராணம்


இந்திரன் துதித்தல்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

மறைமுடி வின்னுந் தேறா மலர்சிலம் படியாய் போற்றி
அறைபுனல் உலகம் எல்லாம் படைத்தளித் தழிப்பாய் போற்றி
சிறைநிறை வாசத் தெண்ணீர் சத்திய விரத தீர்த்தத்
துறைகெழு வரைப்பின் மேய சுந்தர விடங்கா போற்றி.     50

     வேதங்கள் இன்னும் அறியாத, மலர்ந்தும், சிலம்பை அணிந்தும்
உள்ள திருவடி உடையோனே காத்தருள்க; ஒலிக்கின்ற கடல்சூழ் உலகமும்
பிறயாவும் படைத்துக் காத்து அழிப்பாய் காத்தருள்க; கரையினையுடைய
நறுமணங் கமழும் சத்திய விரதத் தீர்த் தத்துறை பொருந்திய இடத்தில்
எழுந்தருளியுள்ள பேரழகனே போற்றி.்

அண்ணலே விடயத் துன்பம் ஆற்றிலேன் ஓலம் ஓலம்
எண்ணறும் யோனி தோறுந் திரிந்தலைந் தெய்த்தேன் ஓலம்
கண்ணினுள் மணியே வேறு கண்டிலேன் களைகண் ஓலம்
புண்ணிய முதலே இன்பப் பூரணா ஓலம் ஓலம்.          51

     தலைவனே ஐம்புலத்துன்பங்களைப் பொறுக்கும் வலியிலேன்
முறையோ! முறையோ! அளவிடற்கரிய சீவபேதங்களுள் பிறந்திறந்து வருந்தி
இளைத்தேன் முறையோ! கண்ணினுள் மணியை ஒப்பவனே உன்னை ஒழிய
வேறு பற்றுக்கோடு காண்கிலேன் ஓலம்! புண்ணியத்திற்கு வித்தே! நிறைந்த
இன்பனே ஓலம்! ஓலம்;

புழுப்பொதிந் தசும்பு பாயும் புன்புலை உடலே ஓம்பிக்
கழித்தனன் கால மெல்லாம் கடையனேன் பொறிகள் யாண்டும்
இழுத்திழுத் தலைப்ப நொந்தேன் இனித்தினைப் பொழுதும்
                                            ஆற்றேன்.
சழக்கறுத் தருள்வாய் உன்றன் சரணமே சரணம் ஐயா.

     புழுக்கள் மலிந்து அழுக்குநீர் பாயும் மிகவும் இழிந்த உடலையே
வளர்த்து காலமெல்லாம் போக்கினேன். மெய், வாய், கண், மூக்கு, செவி
எனப்பெயரிய ஐம் பொறிகளும் எவ்விடத்தும் மாறி மாறி ஈர்த்து வருத்த
வருந்தினேன்; இனித் தினை அளவு காலமும் பொறேன். பொய்தவிர்த்து
அருள்வாய். ஐயனே! உன்றன் திருவடியே புகலிடம்.

     ‘புழு வழுக்கு மூடி, மலஞ்சோரும் ஒன்பது வாயிற்குடிலை’ ‘‘ஏழைத்
தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்’’ ‘எறும்பிடை நாங்கூ ழெனப்
புலனால் அலைப்புண்டு’ ‘மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலன்’
‘தினைத்தனையேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே’ ‘சழக்கனேன்
வந்து சார்கிலேன்’ (இரு செய்யுட்களும் திருவாசத்தில் ஊறி எழுந்தவை.)