பக்கம் எண் :


158காஞ்சிப் புராணம்


ஆறு மநுக்கள் இறந்துபோனார்கள். இப்போது ஏழா மநுவாகிய வைவஸ்த
மநுவினுடைய காலம் நடக்கின்றது. இவருடைய காலத்திலே இருபத்தேழு
சதுர்யுகங்கள் சென்றன. இப்பொழுது இருபத்தெட்டாஞ் சதுர்யுகத்துக்
கலியுகம் நடக்கின்றது.

புண்ணிய கோடீசப் படலம்

கலிநிலைத் துறை

செச்சைச்சடை அந்தணிர் தேமலர் ஓடை சூழ்ந்த
மெய்ச்சத்திய மாவிர தத்தல மேன்மை சொற்றாம்
கச்சிப்பதி யிற்கவர் புண்ணிய கோடி மேன்மை
நச்சிப்புகல் கின்றனம் நன்கு மதித்துக் கேண்மின்     1

     சிவந்த சடையினையுடைய அந்தணர்களே! தேன் மருவிய மலர்களைக்
கொண்ட நீர்நிலை சூழ்ந்த சத்திய விரதத் தலத்தினது உயர்வைக் கூறினோம்.
இனிக் காஞ்சியில் உள்ளத்தைக் கவர்கின்ற புண்ணிய கோடியின் மேன்மையை
விரும்பிச் சொல்கின்றனம் நன்றாகப் பொருட்படுத்திக் கேண்மின்.

     ‘சைவம் விட்டிட்ட சடை’ சைவ வேடத்தது. இறைவன் புகழைப்
பராமுகமாகக் கேட்டல் பாதகமாம்; ‘வலை வீசிய திருவிளையாடல்’ காண்க.
‘கவர்வு விருப்பாகும்’ (தொல். சொல்)

மின் பாய்பொழிற் சத்திய மாவிர தத்த லத்தின்
தென்பாலது புண்ணிய கோடிநந் தேவன் வைப்பு
வன்பாலர்கள் எய்தரும் புண்ணிய தீர்த்த மாடே
என்போலி கட்கும் சிவப்பேறெளி தெய்தும் அங்கண்.   2

     புண்ணிய கோடி எனப்பெறும் நம்முடைய தேவன் இருக்கை.
மேகந்தவழ் பொழில் சத்திய விரத்தலத்தின் தெற்குத் திசையது, அன்பிலார்
அடைதற்கரிய புண்ணிய தீர்த்தத்தின் மருங்கே தன்னைப் போல
அன்பிலார்கட்கும் சிவ வாழ்வு எளிதினில் வாய்க்கும் அவ்விடத்தில்.

     அன்பிலர் எய்தொணாதது; எய்திற்பயன் எளிதிற்கிட்டுவது; அன்பு
சிறிது வைப்பினும் அப்புண்ணியம் கோடி மடங்காய்ப் பெருகு மாகலின்
என்க.

இறைவனிடத்துத் திருமால் வரம்பெறல்

மலர்மேயவன் மேகநல் வாகன கற்பம் ஒன்றில்
தலமேழ்புகழ் நாரணன் தாமரை யாளி யாதி
உலகேழையும் ஈன்றிடும் ஆசையின் உம்பர் கோனைப்
பலநாள் முகிலின் உருக்கொண்டு பரித்தல் செய்தான்.    3