பக்கம் எண் :


சார்ந்தாசயப் படலம் 227


வடிவுடை எமதி டப்பால் வந்தவன் மாயன் ஏனைக்
கடிமலர்ப் பொகுட்டு மேய கடவுள்எம் வலப்பால் வந்தோன்
இடிபுரி தகையோய் இன்ன இருவரும் எம்பால் அன்பாம்
அடியவர்க் கடிமை பூண்டே அணுக்கராய் அமர்வர் கண்டாய்.  39

     ‘‘எம்முடைய அழகிய இடப்புறத்தில் திருமால் வந்தனன். நறுமணங்
கமழும் தாமரைப் பொகுட்டில் மேவிய பிரமன் மற்றைய வலப்புறத்தில்
வந்தனன். அறிவும் அன்புமுடைய திருத்தொண்டர் தமக்கு அணுக்கத்
தொண்டராய் அவர் ஏவல் வழி நிற்பவர் ஆவர் இவர் இதனை நன்கு
தெளிதி.

     இடி-இடித்தல்; முதனிலைத் தொழிற்பெயர்; கழறுதல். புரி-புரிய-மிகச்
செய்ய. புரி என்னும் முதனிலை புரிய என்னும் வினை எச்சப் பொருள்
தந்தது, ‘செய்தக்க அல்ல செயக் கெடும்’’ (குறள்-466.) என்புழிப்போல.
அளி-அளிக்க (மணிகண்.23)

கற்பங்கள் தோறுந் தோன்றும் கணக்கிலாப் பிரமர் மாயர்
முற்பொன்று தலைகள் கோத்து நாற்றிய முளிபுன் மாலை
பொற்பொன்று நமது சென்னி புயம்அரை சரணம் எங்கும்
சிற்பங்கள் விளங்கப் பூண்ட திறம்இது நோக்கிக் காணாய்.  40

     கற்பங்கள் தோறும் தோன்றுகின்ற அளவுட்படாத பிரமர்களும்,
திருமால்களும் முன்முன் அழிய அத்தலைகளைக் கோத்துக்தொங்கவிட்ட
உயர்ந்த புல்லிய மாலைகளைப் பொலிவமைந்த நம்முடைய சிரத்தினும்,
தோளினும், இடையினும், திருவடியினும், பிற இடங்களினும் அவர்கள் தம்
சிறுமை விளங்கத் தாங்கிய திறம் இதனை ஊன்றி உணர்தி.

     பிறத்தலும் இறத்தலும் பிறவும் பரத்துவம் இன்மையைப் புலப்படுத்தும்
என்க. முன்-முன்னைய கற்பங்கள்.

மாண்டவிண் ணவர்கள் எற்பு மாலையும் பலவும் பூண்டேம்
ஈண்டிவை பூண்ட தெற்றுக் கென்றியேல் நின்போல் வார்க்குப்
பூண்டமால் ஒழிப்பான் அன்னோர் பொன்றுறும் அநித்த வாழ்வும்
காண்டகும் எமது நித்தத் தன்மையுங் காட்டக் கண்டாய்.    41

     இறந்த தேவர்களுடைய முழு என்பு மாலைகளையும், சில பல
உறுப்புக்களையும், பூண்டுள்ளேம். இவை பூண்டுள்ள தெதன் பொருட்டெனில்
நின்னைப்போல அறிவு மயங்குவார்க்கு அம்மயக்கத்தைத் தெளிவிப்பான்
அவர்கள் இறத்தலை உடைமையின் நிலைபெறா வாழ்க்கையையும், காண்டற்கு
ஏதுவாம். எமது என்றும் பொன்றா நிலைமையைக் காட்டுதற்கென அறிதி.

சொன்மறை முடிபு தேறுந் தூயருள் தலைவன் நீயே
பன்முறை உலகம் எல்லாம் படைத்தளித் தழிக்கும் எம்மை
நன்மைகூர் வழிபா டாற்றி முத்தியில் நண்ணு கென்னாப்
புன்மருள் அகல நல்கி மறைந்தனன் பூத நாதன்.       42