பக்கம் எண் :


347


வயிரவேசப் படலம்

கலி விருத்தம்

வயிர வாளினான் வணங்கி வெந்துயர்
வயிரம் மாற்றும்வன் மீகம் ஓதினாம்
வயிர மாடமற் றதற்குத் தென்திசை
வயிர வேச்சர மரபி யம்புவாம்.                  1

     வச்சிராயுத னாகிய இந்திரன் வணங்கிக் கொடுந் துன்பமாகிய
வன்மையைப் போக்கும் வன்மீகநாத வரலாற்றைக் கூறினோம். அதற்குத்
தெற்கில் வைரங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகள் சூழ்ந்த வயிரவேச்சர
வழக்காற்றினைக் கூறுவோம்.

பிரமன் செருக்கு

வடவ ரைத்தலை முஞ்ச மானெனுந்
தடநெ டுங்கிரி தன்னி டைச்சிலர்
படிம உண்டியர் பாங்கின் நோற்றுழி
அடல்அ னப்பிரான் அருளின் எய்தினான்.        2

     மேருமலையின் சிகரத்தில் முஞ்சமான் என்னும் பரந்த உயர்ந்த
மலையிடை விரதத்தான் உண்டி சுருக்கியோர்சிலர் நல்லியல்பில் தவஞ்
செய்கையில் வலிமை அமைந்த அன்ன ஊர்தியோனாகிய பிரமன்
அருளினால் அவர் முன் எய்தினான்.

வதனம் ஐந்தொடும் வந்து தோன்றினான்
பதம லர்த்துணை பணிந்தி றைஞ்சினார்
துதிமு ழக்கினாற் சூழ்ந்து கைதொழூஉக்
கதம்அ றுத்தவர் இதுக டாயினார்.              3

     ஐந்து முகத்தொடும் அங்கு வந்து தோன்றின பிரமனின் திருவடி மலர்
இரண்டனையும் பணிந்தனர்; தோத்திர ஒலியுடன் வலம் வந்து கையால்
தொழுது கோபத்தை நீக்கினவர் இதனை வினாயினர்.

     கதம் கூறவே காமமும், மயக்கமும், நீக்கினவர் என்க.

‘‘இலகும் இச்சகம் யார்மு தற்று? மன்
உலகெ வன்புடை உயிர்த்தொ டுங்கிடும்?
பலப சுக்களின் பாசம் நீத்தருள்
தலைவன் யார்? இது சாற்று’’ கென்றனர்.         4