‘திரட்சியும் வெண்மையும் உடைய வளையினாய்! ஐம்பெரும் பூதங்களும் அவற்றாலாய பொருள்களும் தீயிடைப்பட்ட பஞ்சைப்போல அழிய விழி திறந்தருள் சிவந்த சடையினையுடைய பகவனாரொடும் பகைத்து நின்றவர் யாவர் பிழைத்தவர் உளர்? உய்ந்தவர் ஒருவரும் இலர் நீ இதனை அறிந்திலை போலும். அன்னபே ராளனோ டமரினுக் கேகலாற் பன்னகப் படமெனப் பரந்தகல் அல்குலாய் உன்னுடையக் கேள்வனும் பொன்றுவான் உண்மைகாண் என்னவாய் விண்டனன் வளைகரந் தெய்தினான். 11 | ‘பாம்பினது படத்தை ஒத்து மிகப் பரந்த அல்குலையுடையவளே! அப்பேராற்றலனோடு போருக் கெழுதலால் உன்னுடைய நாயகனும் இறப்பான், இது சத்தியம்’ எனக் கூறினர் சங்கு சக்கர முதலிய கரந்து வந்த திருமால். கலிநிலைத் துறை அந்த எல்லைஓர் தானவன் பங்கிசோர்ந் தலையச் சந்த மென்புயத் துகிலுடை சழங்கவேர் ஒழுக உந்து நெட்டுயிர்ப் பெறியமெய் நடுக்குற ஓடி வந்து தோன்றிவாய் புலரநின் றின்னது வகுப்பான். 12 | அப்பொழுதோர் அசுரன் மயிர் சோர்ந் தவிழவும், சந்தனம் பூசிய தோளிடையிட்ட மெல்லிய துகிலும், அரையில் உடுத்திய உடையும் நெகிழவும், வியர்வை ஒழுகவும், உந்துகின்ற பெருமூச்செறியவும், மேனி நடுக்குறவும், ஓடிவந்தெதிர் நின்று வாய் உலர நின்றின்னது வகுப்பான். இறைவி நின்தனிக் கொழுநன்நீள் கயிலையின் இளவண் டறைக டுக்கையான் றனைஅறை கூவும்அவ் வளவில் நறைம லர்க்கரக் கணிச்சியன் நோக்கினான் நமது நிறைக டற்பெரும் படையெலாம் நீற்றினன் அதன்பின், 13 | ‘தலைவீ! நின்னுடைய ஒப்பற்ற நாயகன் உயர்ந்த கயிலையில் எழுந்தருளியுள்ள வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்த பெருமானை வலிதிற் போருக்கழைத்த மாத்திரையில் தேன் பொருந்திய தாமரை மலர்போலுங் கரத்தினில் மழுப்படை தரித்த பெருமான் நோக்கி அவனுடைய நிறைந்த கடலை ஒக்கும் பெரும்படைகள் அனைத்தையும் நீறு படுத்தினன். அதன் பின்பு, பரிதி மண்டிலம் ஆயிர மெனக்கதிர் பரப்பும் உருவ ஆழிஒன்றாக்கினன் ஒளிரும்அப் படையால் பொருவ லித்திறற் சலந்தரன் பொன்றினான் அதனை வெருவி நீளிடைக் கண்டுமீண் டித்தலைப் போந்தேன். 14 | |