தேவர்கள் யாவரும் திருமாலை எவ்விடத்தும் தேடிக் காணாராய்ச் சிகரங்கள் நீண்ட கயிலையை நெருங்கிச் சிவபிரானார் திருவடியை வணங்கி முறையிட மூங்கிலை ஒப்பத்திரண்டு நீண்டு பசுவையுற்று அணிகலன்கள் விளக்கமுறற்குக் காரணமாகிய அழகிய தோள்களையுடைய உமையம்மை யாரை ஓர் பாகங்கொண்ட எம்பெருமான் அம்மாலின் நிலைமையை உணர்ந்து கூறுவார். ஆபரணம் அழகு பெறுதல்; ‘‘பூணுக் கழகளிக்கும் பொற்றொடி’’ (நளவெண்பா.) சொற்பயில் கமலை கேள்வன் சலந்தரன் துணைவி யாய கற்பினிற் சிறந்த காமர் விருந்தையைக் காமுற் றன்னாள் பொற்புரு இழந்த ஈமப் பொடியிடைக் கிடக்கின் றானால் விற்பொலி விசும்பின் வாழ்க்கை விண்ணவர் கேண்மின் என்னா. | ‘புகழ் மிக்க இலக்குமி நாயகன் சலந்தராசுரன் மனைவியாய கற்பினின் மிக்க அழகிய விருந்தையை விரும்பி அவளுடைய பொலிவு மிக்க வடிவிழந்த சுடு பொடியில் செயலற்றுக் கிடக்கின்றான் ஆகலின், ஒளி விளங்குகின்ற வானிடத்து வாழ்க்கை விண்ணவரே கேண்மின்! என்று, பாயபல் லுலகும் ஈன்ற பனிவரைப் பிராட்டி மேனிச் சேயொளிக் கலவைச் சாந்தின் அழுக்கினைத் திரட்டி நல்கி நீயிர்இங் கிதனை அந்த நீற்றிடை வித்து வீரேல் மாயவன் மயக்கந் தீர்க்கும் மரங்கள்மூன் றுளவாம் என்றாள். 20 | பரந்த பல் உலகங்களையும் பயந்த இமயமலைப் பெருமாட்டியார் தம் திருமேனியிற் சிவந்த ஒளியுடைய கலவைச் சந்தனச் சேற்றினைத் திரட்டி வழங்கி நீவிர் இதனை அப்பொடியில் விதைப்பீராயின் மாயவனின் மயக்கத்தைப் போக்கும் மூன்று மரங்கள் அவ்விடத்துத் தோன்றும்’ என்றருளினர். கலவை-பல நறுமணப் பொருள்களின் கலப்பு, அழுக்கு, சேறு என்னும் பொருளது. விண்ணவர் அதனை ஏற்று விடைகொடு வணங்கிப் போந்து தண்ணகை விருந்தை வீந்த சாம்பரின் வித்த லோடும் அண்ணலந் துளவம் அங்கேழ் நெல்லிநீள் அகத்தி மூன்றும் கண்ணெதிர் தோன்றக் கண்டான் கரியவன் மகிழ்ச்சி கொண்டான். 21 | விண்ணோர் அதனைப் பெற்று வணங்கி விடை கொண்டு போய் தண்ணிய முறுவலையுடைய விருந்தை இறந்த சாம்பரின் விதைத்த அப்பொழுதே பெருமையுடைய துளசியும், அழகிய நிறமுடைய நெல்லியும், நீண்ட அகத்தியும் ஆகிய இம்மூன்றும் கண்முன்னரே தோன்றத் திருமால் கண்டனர். மகிழ்ச்சி கொண்டனர். செடியும், மரங்களும் தோன்றக் கண்டனர். |