கண்டு மருங்கில் நெருங்கி மயக்கங்கொண்டு விரையத் துயிலெழுப்பி ‘நீ யார்’ என்று வினவ, நீர்கொண்ட மேகத்தை ஒத்த திருமால் யானே அண்டங்கள் அனைத்தையும் காக்கும் முழுமுதல்வன்; செருக்குடைய நீ யார்? என்னிடத்து நீ விரும்புகின்ற பொருள் யாது? என்றனர். நறவம் ஒழுகு மலரோன் கேட்டு நகைஉட் கொண்டு பிறரும் அல்லர் நீயும் அல்லை பேணி உலகம் நிறுவு முதல்வன் யானே என்னும் இனைய நெறியின் மறலிக் கூறித் தம்முள் ஊடல் வளர்த்து நின்றார். 5 | தேனொழுகும் மலரிலிருக்கும் பிரமன் கேட்டுத் தன்னுள்ளே சிரித்து விரும்பி உலகத்தை நிறுவு முதல்வன், பிறரும் அல்லர்; நீயும் அல்லை; யானே என்னும் இம்முறையில் மாறுபட்டுக் கூறித் தமக்குள் பகையை வளர்த்து நின்றார். சிந்தை நாணுக் கழலச் சிலையின் நாணுப் பூட்டி முந்து கணைகள் தூர்த்தார் மூரிக் கனலி வருணன் இந்து இரவிப் படையும் ஏவி அவைகள் மடியப் பந்த வினையின் மருள்வார் தத்தம் படைவிட் டார்த்தார். 6 | உள்ளத்துள் நாணம் நெகிழ வில்லின் நாணியைப் பூட்டி முற்படும் அம்புகளைச் சொரிந்து வெளியை மறைத்தனர்; வலிய அக்கினி, வருணன், சோமன், சூரியன், இவர்தம் தெய்வப் படைகளை எதிரெதிர் தூண்டி அவைகள் அழிந்துபோகத் தீவினையின் வயப்பட்டு மயங்குவோர் தங்கள் படைகளாகிய பிரமாஸ்திரத்தையும், நாராயணாஸ்திரத்தையும் விட் டாரவாரித்தனர். மும்மைப் புவனம் ஈன்றோன் படையும் முகுந்தன் படையும் தம்முட் பொருது மாய்ந்த பின்னர்க் கமலத் தவிசோன் வெம்மைப் பாசு பதமாப் படையை விடுப்ப மாயோன் செம்மல் உருத்தி ரத்திண் படையைச் செலுத்தி நின்றான். 7 | பிரமாஸ்திரமும், நாராயணாஸ்திரமும் தம்முள் போர்செய்தழிந்த பின்னர்ப் பிரமன் வெய்ய பாசுபதப் பெரும்படையை விடுப்பத்திருமால் தலைமைவாய்ந்த உருத்திராஸ்திரத்தை எதிர்தூண்டி நின்றனர். பெருமான் சோதிலிங்க வடிவாயது அம்ம இரண்டு படையும் அயுத வருடம் நேர்ந்து தம்முள் உடலுங் காலைத் தழங்கும் எரியின் பொறிகள் தும்ம எழுந்து தோன்றிச் சோதி இலிங்க வடிவாய். நம்மை யுடைய பெருமான் அவற்றின் நடுவு நின்றான். 8 | |