கொடிய வாளையுடைய அசுரர் தலைவனாகிய மாவலி வேள்வி செய்யும் இடத்தை எய்தி மூன்றடியில் அடங்கும் நிலத்தை யாசித்துக் குறையிரந்தனர். வாமனரின் வஞ்சகச் சூழ்ச்சியை அறிந்து தானம் கொடாதவாறு தடுத்த குற்றம் பொருந்திய குற்றமற்ற வெள்ளியின் கண்ணைப் போக்கினார். உள்ளத்திற் குற்றமும், உடலிற் றூய்மையும் காட்டினார். மேலும், வெள்ளிக்கு அடையாக்கலுமாகும். ‘வெள்ளியை விழியை’ என வருதல் தெள்ளிது (தொல்-சொல்.88) என்பதனாற் கொள்க. தான நீர் விடும் கரகத்தின் மூக்கில் வண்டுருவாகியும் நீரைத் தடை செய்தவழி வாமன மூர்த்தி தருப்பையால் குத்தித் தடுத்த சுக்கிரர் கண்ணைப் போக்கினர். தன்னடி மும்மையின் அளவை சால்இடம் அந்நிலை அவுணர்கோன் அளிப்ப ஏற்றனன் கொன்னுற வளர்ந்தனன் அண்ட கூடமேல் சென்னிபோய் உரிஞுறத் திகழ்ந்து தோன்றினான். 6 | வாமனர் தம் அடியால் மூன்று என்னும் அளவையுள் அமைந்த நிலத்தை அப்பொழுதே மாவலி அளிப்ப ஏற்றனர். கண்டு வியந்தவர் அஞ்சும்படி வளர்ந்து அண்ட முகட்டிற்கு அப்பால் முடிபோய்த் தடவுமாறு உயர்ந்து தோன்றினர். ஈரடிப் படுத்தனன் உலகம் யாவும்மற் றோரடிக் கிடம்பெறான் உதவி னான்றனை ஆரிடைப் பாதலச் சிறையின் ஆக்கினான் ஏருடைப் புரந்தரற் கிறைமை நல்கினான். 7 | ஓரடியால் மண்ணையும், மற்றோரடியால் விண்ணையுமாக ஈரடியால் உலகங்கள் அனைத்தையும் அகப்படுத்தனர். மேலும் ஓரடிக்கிடமின்றி உதவிய மாவலியின் முடிமீது காலை வைத்து மீள இயலாதபடி பாதலத்திற் சிறையிடை இருத்தினர். இங்ஙனம், எழுச்சியை உடைய இந்திரனுக்குத் தலைமைப் பாட்டினை நல்கினர். மறுவறுங் காஞ்சிமா வரைப்பின் நண்ணுபு நறுமலர்ச் சடைஅபி ராம நாயகன் பிறைமுடிக் காட்டுவான் வாம னப்பெயர் நிறைபுனற் குண்டம்ஒன் றகழ்ந்து நீடியே. 8 | குற்றத்தை நீக்கும் காஞ்சிமா நகரத்தின்கண் மீண்டும் நண்ணிநறிய மலர்களைச்சூடிய சடையினையுடைய அபிராம நாயகனாராகிய முன்னம் அருச்சனை புரியப் பெற்ற பெருமானார் திருமுடிக்கு நீராட்டுவான் வேண்டி வாமன குண்டம் என்னும் நிறைந்த நீருடைய குளத்தைத் தொட்டு அங்குத் தங்கியிருந்து, |