அண்டம் ஓர் அணுவாக அத்துணை வளர்ச்சியை யுடைய. அங்ஙனே அணுவோர் அண்டம் ஆக அத்துணை நுண்ணிலையையும் உடைய. அண்டபிண்டங்கள் அனைத்தினும் நிறைந்து உடனாய் நின்று அவற்றை இயக்கும் நிமித்த காரணனாம் இயல்பினையுடைய. யோகக் காட்சியர் அறிவில் வீற்றிருக்கும் இயல்பினை. கருவிகள் வேண்டாதே சங்கற்பத்தால் முடிக்கும் ஆற்றலுடையை ஆகிய உனக்கு ஐயனே! யாங்கள் அடைக்கலப் பொருளாவேம். பிரமம் என்மரும் ஈசன் என்மரும் சீவன் என்மரும் பேதுறுங் கருமம் என்மரும் வேறும் அவ்வவ கடவுள் என்மரு மாகியே முரணி அவ்வவர் பேச நின்றருள் முதல்வ னேமுதல் ஈறிலா ஒருவ னேஅடியேங்கள் என்றும் உனக்க டைக்கலம் ஐயனே. 10 | பிரமம் எனவும், ஈசன் எனவும், சீவன் எனவும், கன்மம் எனவும், திருமால் எனவும், பிரமன் எனவும், பிறவாறும் அவ்வச் சமயவாதிகள் ஒருவரோடொருவர் மாறுபட்டுப் பேச அவ்வத் தெய்வமே ஆகி நின்றவரவர்க் கருள்செய்யும் முதல்வனே! தோற்றமும் அழிவும் இல்லாத ஒருவனே! ஐயனே! அடியேங்கள் எந்நிலையிலும் உனக்கு அடைக்கலம். இறைவன், வேள்வியில் உலகை ஒடுக்கல் அறுசீரடி யாசிரிய விருத்தம் இனைய வாறுளங் களிவரப் பழிச்சுறும் இமையவர் தமை நோக்கிக், கனைக ழற்பிரான் வீரியம் பெறுவதே கருத்துமக்கெனில் ஏற்கும், வினைமு டித்தவற் கொல்லுதும் அல்லது விரவிஎங் கணும்நிற்கும், அனைய கள்வனைச் செகுத்திடல் அரிதுமக்கிசைவுகொல் அது என்றான். 11 இங்ஙனம் உள்ளம் மகிழ்ச்சி எழப் போற்றும் தேவர் தங்களை நோக்கி வெல்கழலணிந்த பிரானார் ‘‘இந்திரியம் பெறுவதே உமக்கு நோக்கம் ஆனால் அதற்குப் பொருந்தும் செய்கைசெய்து அப்பண்டாசுரனைக் கொல்வோம் அன்றி எவ்வுடம்பினும் கலந்து நிற்கும் அவ் வஞ்சனை வேறொருபாயத்தால் அழித்தல் இயலாத தாகும். அச்செயல் உங்கட்கு இசைவுடையதோ?” எனவினவியருளினர். ஐயன் வாய்மொழி கேட்டலும் கடவுளர் அவ்வினை தாழாமே, செய்ய வேண்டும்மற் றுலகெலாம் புரப்பதெம் இசைவுபெற்றோசெந்தீக், கைய னேஎனத் தலைவனும் அன்னதேற் காஞ்சியின் நுமதாக்கை, வெய்ய செந்தழற் குறியிடை அவியென விரவுகென்றருள் செய்தான். 12 இறைவனது திருவாக்கைக் கேட்ட அப்போதே தேவர்கள் ‘‘செந்தீயை ஏந்திய செல்வனே! தங்கள் திருவுள்ளக் குறிப்பினை விரைய நிறைவேற்ற வேண்டும். உலகங்களை எல்லாம் அருள்சுரந்து காத்தல், |