எம்முடைய இசைவினைப் பெற்றல்லவே? எனக்கூற நாயகரும் அற்றேல் காஞ்சிபுரத்தில் வேள்விக் குண்டத்துச் செந்தழலிடும் அவிப்பொருள்களாக நும்முடம்பெல்லாம் ஆகுக” என்றருளினர். யாங்கள் இங்கிருந் தென்பயன் நின்சுடர்க் குறியிடைக் கரந்தேமேல், ஓங்கும் இன்பமே தலைப்படப் பெறுதும்என் றுரைத்தடி தொழுதேத்தும், ஆங்க வர்க்கெலாம் விடைஅளித் தருவரை அணங்கொடுந் திருக்காஞ்சி, ஞாங்கர் எம்பிரான் செழுந்தழற் பிழம்பொளி நலந்திகழ் உருக்கொண்டான். 13 ‘‘யாங்கள் இவ்வுடம்புகளால் என்னபயன் பெறக்கடவேம். நும்முடைய சுடர் வடிவில் உடம்புகள் மறையப் பெறுமேல் பேரின்பம் தலைக்கூடப் பெறுவோம்’’ என்று கூறித்தொழுது துதிக்கும் தேவர் யாவர்க்கும் செல்ல விடைகொடுத் துமை யம்மையா ரொடுந் திருக்காஞ்சியை அணைத்தருளிப் பெருமானார் செவ்விய நெருப்புருவாம் ஒளிநலம் சுடரும் திருமேனிதாங்கினர். அளப்ப ருஞ்சிகைப் படலைமீக் கவைத்தெழுந் தெங்கணும் அழல்வீசக், கிளைத்து நின்றுதன் வலப்புடை உகிரினாற் குண்டமுங் கெழுவித்து, வளைத்த குண்டத்து வாமதே வத்திரு வடிவின் நெய் பூரித்து, விளக்கு தத்துவத் தருப்பைமுக் குணப்பெரும் பரிதிமே வரக்கொண்டு. 14 அளவில் உச்சிகளைக்கொண்ட தொகுதிகள் மேற் கிளைத்தெழுந் தெவ்விடத்தும் சுடர்விட்டு அழகிய வடிவில் தழைத்து நிற்பத் தனக்கு வலப்புறத்தே நக நுதியினாற் குண்டமும் இயற்றி அக்குழியிடத்துச் சுடர்வடிவுடைய நெய்யை நிரப்பி அறிவை விளங்குகின்ற தத்துவங்களாகிய தருப்பைகளை முக் குணங்களாகிய பெரிய மேடைகளில் பரப்பி, மேற்படி வேறு வேள்வியுந் தானே வேள்விப் பொருள்களுந் தானே வெய்ய வேள்விவேட் பவனுந் தானே வேள்விகொள் இறையுந் தானே வேள்வியின் பயனுந் தானே என்பது விளக்கி எம்மான் வேள்விசெய் தீக்கை யுற்றான் விளங்கருட் சத்தி யோடும். 15 | வேள்வியும், வேள்விக்குரிய உபகரணங்களும், விரும்பத் தக்கயாக புரோகிதனும், வேள்விப்பூசனையை ஏற்றுக்கொள்பவனும், விளைபயனும், தானே என விளக்கிக் காட்ட எமதுபெருமான் வேள்வி செய்தற் குரிய தீக்கையைத் திருவருட் சத்தியாகிய யாக பத்தினியொடும் மேற்கொண்டனர். வண்டுற்ற மலரோ னாதி வலிகெழு தருக்கள் ஈறா அண்டத்தின் அகத்த பூதம் அனைத்தையும் பெருங்கால் வேகச் சண்டத்தின் வாங்கி வாங்கி ஆச்சியந் தயங்கும் அங்கேழ்க் குண்டத்தில் தூய்மை செய்து கொழுந்தழல் மடுத்திட் டானால். 16 | |