பக்கம் எண் :


590காஞ்சிப் புராணம்


மாண்டகு மகவான் ஈன்ற வாலியைக் கமலக் கையால்
தீண்டினன் உச்சி மோந்து செவியறி வுறுத்தல் செய்வான்.   113

     சூரியனும் கண்டபோதே விரும்பிப் புணர ஆண்மையையுடைய
சுக்கிரீவன் அப்பொழுது பிறந்தனன். மாட்சிமையுடைய இந்திரன் தான்
பயந்த வாலியைத் தழுவி உச்சி மோந்து உபதேசம் செய்வான்.

பண்ணவர் முனிவர் யாரும் பரவினர் பேறு பெற்ற
புண்ணிய நகரங் காஞ்சி ஆயிடைப் போந்து முக்கண்
அண்ணலைத் தொழுது மைந்தா கவிகளுக் கரசாம் பேறு
நண்ணுகென் றுரைப்ப வாலி நளிர்புனற் காஞ்சி புக்கான்.  114

     மைந்தனே யாவரும் வழிபட்டுப் பேறு பெற்ற புண்ணியத் தலமாகிய
காஞ்சியை எய்திச் சிவபிரானை வணங்கிக் குரங்குகளுக் கரசாகும்
பேற்றினைப் பெறுக என்றுஇந்திரன் விடுப்ப வாலி குளிர்ந்த நீர் நிலைகள்
சூழ்ந்த காஞ்சியை அடைந்தனன்.

நடலைவெம் பிறவி மாற்றுஞ் சிவகங்கை நன்னீ ராடிச்
சுடரொளித் திருவே கம்பந் தொழுதுபோய் மயானக் கீழ்பால்
மடனறச் சித்தர் பல்லோர் வழிபடும் பெருமை சான்ற
கடனுடை வாயு லிங்கங் கண்களி பயப்பக் கண்டான்.     115

     கொடிய துன்பப் பிறவியைப் போக்கும் சிவகங்கையில் மூழ்கித்
திருவேகம்பத்தை வணங்கிப் பின்பு மயானத் தலத்திற்குக் கிழக்கில்
அறியாமை நீங்கச் சித்தர் பலரும் வழிபடும் பெருமை நிரம்பிய
கடப்பாடமைந்த வாயுலிங்கத்தைக் கண்களிப்புறக் கண்டனன்

மடல்பெறு வேட்கை யாளன் வாயுவின் மிடலென் றெண்ணிக்
கடல்புரை அன்பின் அங்கட் கைதொழூஉத் தவங்க ளாற்றி
மடலவிழ் கடுக்கை நம்பால் வரம்பல கொண்ட நேர்ந்தார்
அடல்வலி பாதி யோடு குரக்கினத் தரசும் பெற்றான்.      116

     மகளிர் மடலேறுவதற்குரிய விருப்பம் வருவதற்கேதுவான
அழகையுடைய வாலி, இம்மூர்த்தி வாயு வலி பெறுதற்குக் காரணமானவர்
என்று மகிழ்ந்து கடலையொக்கும் பேரன்பினால் அங்குக் கைதொழுது தவம்
புரிந்து இதழ் விரிகின்ற கொன்றைமாலையைச் சூடிய நம்மிடத்தே வரம்
பலவும் பெற்று மேலும் போரில் எதிர்ந்தவர் மிக்க வலியில் பாதியோடும்
குரங்குகளுக்கு அரசனாம் பதவியையும் பெற்றனன்.

பெற்றபின் இலிங்கந் தன்னைப் பிறங்குதன் இருக்கைஉய்ப்பான்
பற்றினன் வலியாற் காஞ்சிப் பதிநமக் கினிய வாற்றான்
மற்றவன் பெயர்க்க லாற்றான் மிடலெலாம் வைத்து வாலிற்
சுற்றிஈர்த் தணிவால் இற்றுத் தூரத்தே அலறி வீழ்ந்தான்.    117

     பேற்றினுக்குப் பிறகு வாயுலிங்கத்தைத் தன்னிருப்பிடத்திற்குக்
கொண்டுபோக வலித்தனன். கச்சிப் பதியில் விருப்புடையேமாகலின்