பக்கம் எண் :


642காஞ்சிப் புராணம்


     செலவு கொள்ளும் செவ்வாய் முதலிய கிரகங்கள் அசுவினி முதலிய
நட்சத்திரங்கள், மேஷ முதலிய இராசிகள் இவற்றொடும் வழங்குகின்ற சந்திர
சூரியர் தாமும் வடக்கில் அமைந்த மேரு மலையை விரும்பி வலம் வருவர்
எந்நாளும். அச் சிறப்பை எண்ணி யான் வருந்துகின்றனன் என்றுரைத்து
மேலும் கூறுவர்.

தனக்கு நேர்வரி யாய்பல சாற்றுவ தென்கொலோ
எனக்கு நீநனி நண்பினை ஆதலின் இத்திறம்
உனக்கி யம்பினன் இன்னினி ஏகுவல் ஒய்யென
மனக்கு வேண்டிய செய்கென மாதவன் நீங்கினான்.   192

     ஒப்பில்லாதோனே! பலவாக விரித்துரைத்துப் பயன் என்னை? எனக்கு
நீ நெருங்கிய நண்புடையை ஆகலின் இச் செய்தியை உனக்குக் கூறினேன்.
இப்பொழுதே விரையச் செல்வேன், உன் மனப்போக்கின் படி செய்வாயாகென
முனிவரர் அகன்றனர்.

விந்தம் ஓங்கி எழுதல்

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     பத்தர் மெய்க்கிளை மகதி யாழ்பயில் படிம உண்டியன்
நீங்கலும், மெய்த்த வெஞ்சினம் மீக்கொள் மால்வரை வீயும் எல்லை
விளக்கினைச், செத்தி றப்ப வளர்ந்தெ ழுந்து விசும்பு சென்று
நிவந்ததால், மைத்த வல்லிருள் கீறி வாள்கள் வயங்கும் ஆறு
தடுத்தரோ.                                           193

     பத்தர் என்னும் உறுப்பினையும், சிறந்த கிளை என்னும் நரம்பிசை
யினையும் உடைய மகதியாழ் பயிலும் விரதங்களான் உண்டி சுருங்கியவர்
அகன்ற அளவே மெய்யே கொடிய சினம் மேலெழுந்த பெரிய விந்தம்,
அவியும்கால் மிக்கெரியும் விளக்கினை ஒத்து மிக்கு வளர்ந் துயர்ந்து
வானில் ஓங்கி உயர்ந்தமையால் கரிய பேரிருளைக் கிழித்து ஒளியுடைய
சந்திர சூரியர் முதலானோர் வழங்கும் வழியினைத் தடை செய்தது.

துருவ மண்டல எல்லை கீழ்ப்பட மேக்கெ ழுஞ்சுடர் வெற்பினைத்
தருநி லத்தவர் நோக்கி முந்து தழற்ப டைக்குலி சக்கொடுங்
கருவி யிற்சிற கரிவ லாரி யுடன்செ ருச்செய் கருத்தினால்
வருவ தாங்கொல் எனத்தி கைத்து மருண்டு தம்முள் வெரீ
                                        இயினார்.     194

     துருவ நட்சத்திரம் கீழாக மேலெழுந்த விந்த மலையை ஐந்தருக்களை
யுடைய தேவர் கண்டு நெருப்பொக்கும் வச்சிராயுத மாகிய கொடிய
படையினால் மலைகளின் சிறகுகளை அரிந்த இந்திரனொடு போர் செய்யும்
நினைவுடன் வருவதோ என முன்னர் ஐயுற்றுத் திகைப்புற்று மயங்கித்
தமக்குள்ளே அஞ்சினர்.