பக்கம் எண் :


644காஞ்சிப் புராணம்


றக்கதிர்கள் மொய்த்திடும், இருதி றத்தினொடு மருவு பெற்றிமை
இசைந்த மன்னுலகம் அற்றைநாள், மரும லர்க்குழலி பாக மாகவளர்
மறைமு தற்பொருள் நிகர்த்தலால்.                          198

     விந்தமலை சூரியன் முதற் சுடர் செல்லும் வானவழியை அடைத்து
மேலிடத்தைத் தழுவுதலால் ஓர்பால் இருள் செறியவும் மற்றைப் பாதியில்
ஒளிக்குழாம் மொய்க்கவும் இங்ஙனம் இருவகையாகப் பொருந்தும் நிலையை
அமைந்த மன்னும் உலகம் அந்நாள் ஏலவார்குழலி பாகத்தில் தங்கிவளர்
வேதமுதல்வனை ஒத்துவிளங்கியது.

     இகழ்ந்த நீர்இனி நடப்ப தெங்கண்என எள்ளி வாள்களை
நகைப்பதூஉம், திகழ்ந்த மேருவொடு செருவி ளைப்பஅறை கூவி
வீரநகை செய்வதூஉம், உகந்தெ ழுந்தனது கீர்த்தி பல்குவதும் ஒப்ப
எங்கணும் அடித்தலம், அகழ்ந்து கல்லென இசைத்து வெள்ளென
விளர்த்து வீங்குபுனல் அருவியே.                          199

     சுடர்களை நோக்கி என்னை வலம்வராது இகழ்ந்த நீவிர் இனி
எவ்விடத்திற்குச் செல்வீர் என, அவற்றை இகழ்ந்து சிரிப்பதும், பழித்த
மேருமலையொடு போர்செய்யும் பொருட்டு வலிதிற் போருக்கழைத்து
வீரச்சிரிப்பிளை விளைப்பதும், உயர்ந்தெழுந் தனது மிகுபுகழ் பலவாதலும்
ஒத்து விளங்குவன அடித்தளத்தின் எவ்விடத்தையும் பெயர்த்துக் கல்லென்
றொலி செய்து வெள்ளென வெளிறுற்று வீழும் மிகுபுனல் அருவிகளே.

     இறவு ளர்க்குமிசை உலக வாழ்க்கையர் விருந்த ளித்துவகை
எய்தினார், குறம டந்தையரும் அரம டந்தையரும் அளவளாய்உறவு
கொண்டனர், முறைநி றுத்துசுர முனிவர் வெற்புறையும் முனிவர்
நல்வர வெதிர்ந்தனர், மறைமு ழைப்பனிகள் வானு லாம்பணி புலம்பு
தீர்ந்திட மணந்தன.                                     200

     மலைக் குறவர்க்கு விண்ணோர் விருந்தூட்டி மகிழ்ந்தனர்.
குறமகளிரும் கலந்து சூழ்ந்தனர். நல்வழக்கை மேற்கொள்கின்ற தெய்வ
முனிவரர் மலையில் வதியும் முனிவரரை எதிர்கொண்டனர். குகையில்
மறையும் பாம்புகள் ராகு கேதுக்களுடன் தனிமை அகலக் கூடின.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

மிளைபடு சாரற் குன்றம் மேக்குற நிவத்த லோடும்
ஒளிவழங் காமைக் கால வேறுபா டொழிந்த வாற்றான்
வளமலி தவந்தா னங்கள் முதலிய மறுத்துப் பைங்கூழ்
விளைவுகள் அஃகி ஞாலம் வெறுவிய தாயிற் றன்றே.    201

     காவற் காடுகள் அமைந்த சாரலையுடைய விந்தம் மேலே பொருந்த
உயர்தலோடும் சுடர்கள் வழங்காமையால் இரவு பகல் இருதுக்கள் ஒழிந்தன.
வளமிக்க தவமும் தானமும் பிறவும் ஒழிந்து பசிய பயிர்கள் தரும் பயன்கள்
சுருங்கி உலகம் வறிதாயிற்று.