செக்கு-சிலை-சிலம்பொலி தன்னிடைஎள் ளினைப்பெய்யின் மற்றோர் ஞாங்கர்த் தயிலம்எழச் செய்வதொரு செக்கும் உண்டு, மன்னுயிர்செய் வினைப்பயனைத் தாமே நல்குஞ் சிலைஒன்று சிலைப்பாவை ஒன்று மன்னுங், கன்னிமதிற் காஞ்சிநகர் காவல் பேணுங் கருமேனி வயிரவமாக் கடவுள் பாத, நன்னடனச் சிலம்போசை இடைய றாது நானிலத்தோர் வியப்பெய்தக் கேட்கும் ஓர்பால். 20 தன்னிடத்தில் எள்ளையிடின் பிறிதோரிடத்து நெய் (எள் நெய்) எழச் செய்வ தொரு செக்கும் உள்ளது. பல்லுயிரும் செய்கின்ற புண்ணிய பாவப் பயன்களைத்தாமே நல்க வல்ல கல் ஒன்றும்; கல்லால் அமைந்த பாவை ஒன்றும் உள்ளன. அழிவில்லாதமதில் சூழ்ந்த காஞ்சி நகரைக்காக்கும் காரி எனும் பெயருடைய வயிரவர் தம் திருநடனச் சிலம் பொலி நானிலத்தோர் அதிசயிக்குமாறு ஓவாது கேட்கும் ஒருபுறம். இன்னனவாம் அதிசயங்கள் மற்று முள்ள எல்லையிலை அவைமுழுதும் அறிவார் யாரே, முன்னுகத்தின் எல்லார்க்கும் காட்சி எய்தும் மூண்டகொடுங் கலியுகத்திற் படிமை வாழ்க்கை, மன்னினோர் சிலர்க்கன்றித் தோன்றா முத்தி மருவினர்க்கு மேலுலகின் வைத்த வண்ணம், அன்னமலி வயற்காஞ்சி வரைப்பின் வாழ்வார் அகங்களிப்பக் கண்ணுதலார் அமைத்த வாகும். 21 இவைபோல்வன ஆகிய விம்மிதங்கள் மேலும் உள்ளன அளவில்லாதன ஆகும். அவற்றை முற்றவும் அறியவல்லவர் யாவரே? கிரேதாயுகத்தின் யாவர்க்கும் காணப்படும். கொடுமை முதிர்ந்த கலியுகத்தில் தவ வாழ்க்கையில் நின்றோர் சிலர்க்கே அல்லாமல் ஏனையோர்க்குப் புலப்படா. முத்தியை அடைந்தோர் மேலுலகில் வைத்தபடி அன்னங்கள் தங்குகின்ற வள வயலையுடைய காஞ்சி வைப்பில் வாழ்வார் மனமகிழச் சிவபெருமானார் அமைத்தன வாகும். இங்குரைத்த மேன்மையெலாங் கண்டுங் கேட்கும் இந்நகரிற் கொடுந்தீமை இழைப்பா ராயின், அங்கவரே கயவரெனப் படுவர் அந்தோ அறிவின்றி அறியாதுஞ் செய்த பாவப், பங்கமெலாம் ஒழிவெய்தும் அறிந்து செய்யிற் பாற்றரிதாம் ஆதலின்நாற்பயனும் வேண்டி, உங்குறைவோர் தத்தமக்கு விதித்த வாற்றான் ஒழுகியே கம்பரருட் குரிய ராவர் 22 இங்குக் கூறிய விம்மிதங்கள் யாவற்றையும் கண்டும் கேட்டும் வைத்து இக்காஞ்சியிற் கொடிய தீங்குகளைச் செய்வராயின் அவரே கீழ் மக்களெனப் பேசப்படுவார். ஐயகோ! அறிவு சிறிதும் இன்றியும் இவற்றை அறியாதும் செய்த பாவப்பயன்களாகிய துன்பங்கள் கெடும். 92 |