பக்கம் எண் :


732காஞ்சிப் புராணம்


     மலவன்மையைக் கெடுக்கும் எமது பெருமான் விதித்த நூல்வழி
நடப்பவர் சலம் மலம் விடும்போதும், கலவிக் காலத்தும், வேள்வி செய்யும்
பொழுதும், பல் துலக்கும்போதும், அசைகின்ற நீராட்டுக் காலத்தும், 
உணவுகொள்கையினும் உரையாடார்.

விதித்தகோல் தின்று தூய மென்புனல் படிந்து மேனி
கதிர்ப்பநீ றணிந்து சந்திக் கடன்புரிந் துறுபே ரன்பின்
முதிர்ச்சியின் இலிங்க பூசை நாள்தொறும் முட்டா தாற்றித்
துதித்தனர் காலந் தோறும் ஏகம்பந் தொழுது போற்றல்.    8

     ஆல், வேல், முதலிய விதித்த கோலால் பற்களைத் தூய்மை செய்து,
தெண்ணீரில் மூழ்கித் திருமேனியில் ஒளியெழத் திருநீற்றினை அணிந்து
சந்தியாவந்தனத்தை முடித்த மிக்க பேரன்பின் முறுகிய நிலமையால்
சிவலிங்க பூசனையை நாடோறும் வழுவாது செய்து துதித்தனராய்க்
காலங்கள்தோறும் சென்று திருவேகம்பரைத் தொழுது போற்றுக.

இம்முறை ஒழுக்கின் மாறா தியங்குறும் பிரம சாரி
செம்மணி வடிவிற் கம்பர் திருவருள் கிடைத்தல் வேண்டி
மம்மரில் குரவன் மாடே மறையெலாம் முறையின் ஓதல்
மும்முறை இரண்டொன் றானும் முற்றுறப் பயிறல் வேண்டும். 9

     இவ்வாறு வழுவாது ஒழுகும் பிரமசாரி மாணிக்க வண்ணராகிய
திருவேகம்பர் திருவருள் வாய்த்தலை விரும்பி மயக்கமில்லாத (தெளிவுடைய)
ஆசிரியரிடத்தே வேதங்கள் அனைத்தையும் மரபொடும் ஓதுக. மூன்று
வேதங்களில் இரண்டொன்றாயினும் திரி வையங்களின்றி முழுவதும்
பயிற்சியுறவேண்டும்.

மடங்கலிற் கன்னி தன்னின் மதிநிறைந் துறுநாள் ஓதத்
தொடங்குக மகரத் தந்நாள் துகளற முடிக்க மீண்டு
மடங்கரும் வெண்கேழ்ப் பக்கத் தோதுக அங்க மாதி
உடங்குதேய்ப் பக்கத் தோதல் விலக்குநாள் ஓதல் வேண்டா.   10

     சிங்கம், கன்னி எனப்படும் ஆவணி புரட்டாசி மாதங்களில்
பௌர்ணிமை கூடும் நாட்களில் நூல் பயிலத் தொடங்குக. மகரத்து அந்நாள்
ஆகிய தை மாதத்துப் பௌர்ணிமையில் குற்றமறப் பூர்த்தி செய்க. அடுத்து
வளரும் (வெண்கேழ்) சுக்கிலபட்சத்தில் அங்கங்கள் உபாங்கங்கள் ஆகிய
இவற்றை ஓதத் தொடங்குக. கிருட்டின பக்கத்தும் விலக்கிய நாட்களிலும்
தொடங்குதல் கூடா.

செவ்விநாண் உடையே தண்டந் திகழ்முந்நூல் உத்த ரீயம்
அவ்வவர் தமக்கு வெவ்வே றருமறை விதித்த வாற்றால்