எவ்வமில் மறையோ ராதி மூவரும் இயல்பிற் கொள்க செவ்வழல் விதியின் ஓம்பி அணிகஅத் திருவெண் ணீறே. 11 | அரைநாண், அரைக்காடை, கோல், முந்நூல், மேலாடை நூல் விதித்தவாறு பார்ப்பனர், அரசர், வணிகர் எனப்படும் முத்திறத்தவரும் தம்மியல்பிற் கொள்க. விதிப்படி வேள்வியைக் காத்துத் திருவெண் ணீற்றை அணிக. முன்னிடை கடையின் ஒன்றப் பவதிச்சொல் மொழிந்துபார்ப்பார் மன்னவர் வணிகர் பிச்சை ஏற்பது மரபாம் ஆயுள் முன்னுறும் இளையர் தம்மின் மூத்தவர்ப் பணிக தாழ்ந்த பின்னவர் தமக்கு மூத்தோர் வாழ்த்துரை பேசல் வேண்டும். 12 | ‘பவதி’ என்னும் சொல்லைப் பிராமணர் முதலான மூவருணத் தவரும் முறையே முதலிலும், இடையிலும் கடையிலும் கூட்டிப் ‘பவதி பிட்சாந் தேகி’ ‘பிட்சாம் பவதி தேகி’, ‘பிட்சாந் தேகி பவதி’ எனப் பிட்சை ஏற்றல் சம்பிரதாயமாகும். ஆயுள் வளர விரும்புகின்ற இளையர் தம்மினும் வயதின் மூத்தோரை வணங்குக. வணங்கியபின், வணங்கப்பட்டோர் வணங்கினோர்க்கு வாழ்த்துரை கூறுவாராக. ஓதிய பிரம சாரி ஒழுக்கினில் வழாது நின்று மூதரு மறைநூல் கற்றோர் முனிவர்தங் கடனில் தீர்ந்து வேதமா மூலத் தெங்கோன் திருவருள் மேவப் பெற்றுப் பேதமில் பெருவீட் டின்பப் பேற்றினுக் குரிய ராவார். 13 | முற்கூறிய பிரம சரியத்தில் தளராது நின்று பழமறைகளைக் கற்றோராகிய முனிவரர்தம் கடனைக் கேள்வியான் முற்றுவித்து வேதமாகிய மாவடியில் எழுந்தருள்கின்ற திருவேகம்பர்தம் திருவருள் கைவரப்பெற்று ஒன்றுபடும் முத்திப் பேரின்பத்திற்கு குரிமை உடையராவர். மேற்படி வேறு பின்னவர்கள் பற்றிகந்து பத்தியினால் திருக்காஞ்சிப் பேரூர் வாழ்க்கை, மன்னுதல்வேட் டனராயின் ஏகம்பன் றனக்கணித்தாம் இருக்கை வைகிப், பன்னருஞ்சீர்க் கண்டிகைநீ றுடல் வயங்கச் செய்பணிகள் பலவும் ஆற்றித், துன்னியமாந் தருமூலச் சுடரொளியை முட்டாது தொழுது வாழ்வார். 14 நான்காம் வருணத்தவர் இருவகைப் பற்றும் விட்டு மெய்யன்பினால் திருக்காஞ்சியாகிய பெருநகரில் வாழ்தலை விரும்பினராயின் திருவேகம்பர் ஆலயத்திற்கு அணித்தாக ஓரிடத்தில் இருந்து சொல்லுக் கடங்காத சிறப்பினையுடைய உருத்திராக்கத்தையும் விபூதியையும் |