எழுசீர் விருத்தம் | 21. பருவ ளக்குமரி யோடு பஃறுளி யாறு வீறுகொடு பாய்தலான் பெருவ ளத்தின தாற்பெ ருவள நாடெ னும்பெயர் பெற்றதால் குருவ ளக்குமரி பாய்த லாற்குமரி நாடெ னும்பெயர் கூறுமால் மருவ ளத்ததென் பாலி ருத்தலான் வழங்குமஃது தென்பாலியே. | கலி விருத்தம் | 22. இன்ன முப்பெரு நாடமை கிற்குமுன் அன்ன வாறியல் அப்பேர் நிலப்பரப் புன்ன வாய்கிலா வோர்பெருங் கண்டமாப் பன்னு மாறு பரந்து கிடந்ததாம். 23. அன்று வான மளாவு பனிமலை ஒன்று மாழியா நின்றது வாரியுட் சென்று மூழ்கிடு தோறுமத் தென்னிலம் இன்று போலாங் கெழுந்ததத் தொன்மலை. 24. இலைப்ப ரப்பெனில் என்னவே யப்பெரு நிலப்ப ரப்பு நிலநடுக் கோட்டினில் அலைப்ப ரப்பி னமைந்தங் கிருந்தது தொலைப்ப ரப்பெனச் சொற்றிடு மாறரோ. 25. நன்றொ ளிப்பிழம் பாகிய ஞாயிறு தன்ற னிற்சுழல் தன்னிற் சிதறிய சென்ற தான திவலையே யின்னுயிர் ஒன்று மிவ்வுல கென்றுமே யோதுவர். 26. அன்ன வாறு சிதறிய வப்பொறி தன்னிற் சுற்றலாற் றண்ணென் றிறுகியே இன்னு யிர்தோன்றற் கேற்ற நிலையினை அன்ன துந்நா ளடைவி லடைந்ததே. ------------------------------------------------------------------------------------------ 22. உன்ன வாய்கிலா - எண்ண முடியாத. 23. ஆழி, வாரி - கடல். 24. எனில் பரப்பு இலை - என்னைவிடப் பரப்புடைய நிலப்பகுதி இல்லை. அலை - கடல். 25. தன் தனில் சுழல் - தன்னைத்தான் சுற்றுதல், சிதறிய சென்ற - சிதறிச் சென்ற. | |
|
|