பக்கம் எண் :


106புலவர் குழந்தை

   
        34.        கருவி லேயுல கம்முதன் மக்களாய்
                  வருத மிழ்மக்கள் வாழ்ந்தவத் தொன்னிலம்
                  பொருவி லாத பொருகடல் போந்துமுன்
                  பருகி லாத பகுதியைக் காணுவாம்.
 
கொச்சகம்
 
        35.       தன்னிகராந் தமிழ்வளர்க்கத் தலைச்சங்கந் தனைநிறுவி
                  மன்னுபெரும் புகழ்பூத்த மழைவளக்கைப் பாண்டியர்தந்
                  தன்னுமுயர் பதியான தொன்மதுரை யெனுநகரைத்
                  தன்னுடைய தலைநகராத் தான்கொண்ட தந்நாடே.

        36.       அந்நகரம் பஃறுளியாற் றங்கரையி லுலகிலுள
                  எந்நகரு மிந்நகருக் கிணையாகா தெனும்படிக்குத்
                  தன்னிகராந் தமிழ்வளர்க்குந் தலைக்கழக மோடுதமிழ்
                  மன்னர்களும் புலவர்களும் வாழ்நிலையா விருந்ததுவே.
 
திராவிடம்
 
        37.       அந்நாட்டின் வடக்காவா னணிவிந்த மதன்றெற்கா
                  நன்னாட்டின் முன்னாட்டு, நாடாநன் னலங்காட்டும்
                  பன்னாட்டு முன்னீட்டும் பயன்காட்டும் படியமைந்த
                  தென்னாட்டின் வடநாடாந் திருநாடு திகழ்ந்ததுவால்.

        38.        மலைப்பிறந்து கற்றவழ்ந்து மலைச்சாரல் வழிநடந்தே
                  இலைப்பரந்த நறுமுல்லை எதிர்கானத் திடைவளர்ந்து
                  தலைப்பிறந்த வளமருதந் தனைமருவிப் பயனுதவி
                  அலைப்புகுந்து நலம்புரியு மாறென்ப வவ்வாறே.

        39.        வடவரையு மிடைவரையும் வானளவுங் குடவரையும்
                  மிடைவரையா தெழுகோதா விரிகாரி பெண்பாலி
                  தடவரைகா விரிவானி தமிழ்வையை பொருநைமுதல்
                  நடைவரையா வாறுகளால் நல்வளத்த திருநாடு.

        40.        மலைவளமுங் கான்வளமும் மருதவயற் பெருவளமும்
                  அலைவளமுந் தலைமயங்கி யறாவளமா வமைந்ததொடு
                  நிலவளநீர் வளமெல்லாம் நிலைவளமா நிலவியதால்
                  இலகுதிரா விடமெனப்பே ரேற்றதுவா லிந்நாடே.
------------------------------------------------------------------------------------------
        39. மிடைதல் - நிறைதல். வரைதல் - நீக்கல். காரி - கிருஷ்ணா. பெண் -
பெண்ணையாறு. நடைவரையா - வற்றாத. 40. திரு ஆ இடம் - செல்வம் பொருந்திய
இடம். திரு - செல்வம். ஆ - ஆகும், ஆதல்.