ஷ வேறு வண்ணம் | 55. தேனுந்தினை மாவுந்தொகு தெளிவுந்தெளி தேனை மானுஞ்சுனை நீருங்கழை யோடைவன மடையும் கானந்தரு கிழங்கும்பல கனியுங்கனி மொழியார் ஏனந்தனி லேநந்திட வினிதாவிருந் தயரும். | ஷ வேறு வண்ணம் | 56. துளிமிகு கூதிரிற் றுணைமை யோடுயிர் களிமிகி யாமமெய் கலந்தங் கின்புற அளிமிகு காதல ரணுகி யன்பது கொளவிட மாய்மழைக் குறிஞ்சி மன்னுமால். | முல்லை | 57. கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச் சொல்லியர் முத்தொடு துனிவு கொண்டொளிர் பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும் முல்லையம் புறவடர் முல்லை கா ணுவாம். 58. பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும் பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தந் தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல் ஆவின மொருங்குற வருக ணைக்குமால். 59. மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர் கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட் டக்கறைக் கொண்டுபார்ப் பணைக்கும் பேடையைக் கொக்கரக் கோவெனக் கூவுங் கோழியே. 60. முதிரையுஞ் சாமையும் வரகும் மொய்மணிக் குதிரைவா லியுங்களங் குவித்துக் குன்றெனப் பொதுவர்கள் பொலியுறப் போர டித்திடும் அதிர்குரல் கேட்டுழை யஞ்சி யோடுமே. ------------------------------------------------------------------------------------------ 55. தெளிவு - கனிச்சாறு. கழை - மூங்கிலரிசி. மடை - சோறு. ‘அயரும்’ எனச், செய்யுமென் முற்றுப் பல்லோர் படர்க்கையில் வந்தது. பின்னும் இவ்வாறு வருவன கொள்க. 56. அளி - அன்பு 57. புறவு - காடு. 58. கடறு - காடு. முக்குழல் - கொன்றை, ஆம்பல், வேய்ங்குழல். 59. கக்கம் - தோளிடுக்கு (கிச்சு). முக்கிட - வருந்த. பார்ப்பு - குஞ்சு. 60. பொதுவர் - முல்லை நில மக்கள். பொலி - தவசக்குவை. உழை - ஒருவகை மான். | |
|
|