10. பழுதி லாத பயிர்த்தொழில் பழுதி லாது பயிற்றவே பழுதி லாது பலதொழில் பழுதி லாது பயிற்றினர். 11. உழுந்தொ ழிற்குரித் தோங்கவே ஒழிந்த யாவு முஞற்றலான் பழந்த மிழ்வகுப் பாரெலாம் உழுந்தொ ழிற்கொ ளுழவரே. 12. தாளி னாற்பொருள் தருவதை வேளெ னப்பொருள் விள்ளுவர் நாளு மேதொழில் நன்குசெய் தாளு வோர்கள்வே ளாளரே. 13. முரச வென்றி முடியுடை அரச ராற்பேர்நி லக்கிழார் வரிசை பெற்றுமா மன்னர்கீழ் விரிசெய் யாளுநர் வேளிரே. 14. இத்தொ ழிலிவர்க் கின்றெனா எத்தொ ழிலுமி யாருஞ்செய் தத்தொ ழிற்குரி யார்களாய் ஒத்த வாழ்ந்த ரொருங்கரோ. 15. மன்ன ராகலாம் பின்னரும் மன்னர் பின்னரின் வாழலாம் அன்னர் யாவரு மந்தணர் பின்னென் வேற்றுமை பேசலே. 16. அரச ரில்வழி யந்தணர் அரச ராயுல காளுவர் வரிசை பெற்றுயர் மற்றரும் அரசு தாங்குவ ரங்ஙனே. ------------------------------------------------------------------------------------------ 12. தாள் - முயற்சி. 13. செய் - நிலம், நாடு | |
|
|