பக்கம் எண் :


134புலவர் குழந்தை

   
         34.      எண்ணிய படியுள வெழுச்சி மீதுற
                 அண்ணிய பொதுமைநோக் கறிஞர் தங்களை
                 நண்ணியே யமர்வுற நகரிற் கூட்டியே
                 கண்ணிய மொடுதமிழ்க் கழகங் கண்டனன்.

         35.      கண்டவக் கழகமுன் கருத்தை யேற்றியே
                 வண்டமிழ் நூல்களை வரைய றுத்திடத்
                 தண்டமி ழகத்திடைத் தமிழின் வாழ்வுறும்
                 ஒண்டமிழ்ப் புலவரை யொருங்கு கூட்டினன்.

         36.      கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடை
                 நாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக்
                 கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களை
                 ஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ.

         37.     அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக்
                 கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவை
                 உண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத்
                 தெண்ணிய படியரங் கேற்றி னானரோ.

         38.     அவ்வரங் கேறிய வரிய நூல்களை
                 ஒவ்வொரு தமிழரு மோதி யின்புற
                 அவ்விடை யேடெழுத் தாணி யோடமை
                 செவ்விய இலச்சினை செறித்திட் டானரோ.

         39.      அவ்வகை யொவ்வொரி யாண்டி னோர்முறை
                 செவ்விய நூலரங் கேற்றிச் சீருற
                 ஒவ்விய படியெலா முழைத்துத் தீஞ்சுவை
                 வவ்விய முத்தமிழ் வளர்த்து வந்தனன்.

         40.      ஈங்கிது வாகவாண் டிருந்து செந்தமிழ்ப்
                 பாங்குட னாய்தமிழ்ப் பாவல் லோர்களால்
                 ஓங்கிய முத்தமி ழோதி யத்தமிழ்
                 ஆங்குயர் வழிகளு மாய்ந்து வந்தனன்.


         41.      தகையுற வத்தமிழ்ச் சங்கந் தங்கினோர்
                 வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத்
                 தொகையுறச் செய்துநூல் தொகுத்து மோதியும்
                 திகழுற வாய்ந்தநேர் செய்து வந்தனர்.
------------------------------------------------------------------------------------------
         36. கோட்டி - கூட்டம். 37. கண்ணுதல் - கருதுதல். உண்ணுதல் - கேட்டல்.