கொச்சகம் | 17. ஏராளர் கைவளம்போ லிடமாரக் குடம்பெய்த காராலே மலையாறுங் கான்யாறு மடைகுளமும் நீராலே நிறைவெய்த நிலமெல்லாந் தளைபட்ட சீராலே நிறைவெய்துஞ் செய்யுளெனப் பொலிந்ததுவே. 18. மடிமையிடைப் படியாராய் வளம்பெருக விளையுநில நெடுமையில மென்னாராய் நிலமெனுநல் லாள்மகிழ மிடிமையற வுலகர்பசி வெருண்டோடப் பேரூக்கம் உடைமையரா யுழவர்நில முழவுதலைப் படுவாரே. | நன்செய் | 19. வலங்கொடுநல் லாரிடித்த மாவினிடைச் செம்பாகைக் கலங்கிடவார்த் தம்மாவைக் கருவிகொடு கிளறுதல்போல் நிலங்குழைந்து மெதுவுறத்தண் ணீர்தேக்கிப் பதமாக்கி அலங்கொடுசே றதுவாக அணிவயலை யுழுவாரே. 20. பைந்தழையை மிதித்துழக்கிப் பதம்படநன் றாய்மசித்துச் செந்தமிழ்வாய்ச் செம்மொழியார் தீஞ்சுவைமாச் சோறடல்போல் பைந்தழையை மிதித்துழக்கிப் பரம்படித்துப் பழங்சேற்றைச் செந்தமிழின் செம்பாகஞ் செய்தொழுங்கு செய்வாரே. 21. கொழுஞ்சாற்றி னிடைமேயுங் கொண்டலிளஞ் சிப்பியிடை விழுஞ்சேற்றின் துளிமுத்தாய் மிளிர்கவெனப் பெய்யுதல்போல் உழுஞ்சாற்றி னுவந்துகட லுலகோம்பும் பெருக்காளர் செழுஞ்சேற்றில் முளைக்கவெனச் செந்நெல்லை விதைப்பாரே. 22. அஞ்சாய லிளஞ்சிறகா லடைகாக்க முட்டையிளங் குஞ்சாகி யுறைநீக்கிக் கொண்டுவெளிக் கிளம்புதல்போல் மஞ்சாரும் வளவயலில் மருவியிள நீர்காத்த செஞ்சாலி யுமிநீக்கிச் செழுமுளையாக் கிளம்பினதே. ------------------------------------------------------------------------------------------- 18. மடி - சோம்பல். மிடி - வறுமை. 19. அலம் - கலப்பை. 20. பைந்தழை - கீரை. மிதித்தல் - அமுக்குதல். மாவுடன் கீரையைக் கலந்து ஆக்கல். 21. சாறு - ஆறுபாய் ஆலைக்கருப்பஞ்சாறு. விழும் சேறு - நல்ல இனிமை. சாறு - விழா. 23. சாயல் - மென்மை. ஆர்தல் - பொருந்துதல். சாலி - நெல். | |
|
|