பக்கம் எண் :


146புலவர் குழந்தை

   
          30.   ஆளாலே பகைநீக்கி யதனாலே வளந்தேக்கித்
               தாளாள ரெனவேசெந் தமிழாளர் சொல்லுதலேர்த்
               தோளாளர் கொழுநுனியின் சுவையாலே யெனிற்சுமைகொள்
               வேளாளர் பெருமைதனை விரித்தோதப் படுமோதான்.
 
புன்செய்
 
          31.   சொற்படுக்குஞ் சுவைமொழியார் சோறாக்கு மரிசிதனைக்
               கற்பொறுக்கித் தவிடொழியக் கழுவிநலங் காணுதல்போல்
               மற்படுக்கும் பலன்கொடுக்கும் வளம்படுக்கு நிலமதனைக்
               கற்பொறுக்கி முட்பெருக்கிக் களமர்நலங் காணுவரே.

          32.   தொடிப்புழுதி கஃசாக வுணக்கிடினத் தொகுபுழுதி
               பிடித்தெருவும் வேண்டாது பெரும்பயனுண் டாக்குமெனும்
               படித்துழுது புழுதியினைப் பலமுறைசெம் பாடாக்கி
               அடிப்புழுதி மேக்குறப்பண் பாக்கிநல மாக்குவரே.

          33.   பருவத்தே பயிர்செய்யும் பண்பறிந்து பைங்கூழ்நோய்
               ஒருவத்தா னேயெருவிட் டுழுதுவிதைத் திட்டவிதை
               கருவைத்த வுடனேநற் கதிர்காணு முறுதியுடைத்
               திருவத்த ராய்விளைவு செய்துநலங் செய்வாரே.

          34.   மனப்பயிரைப் பொருண்மாற்றி மடியின்றிக் குடிகொண்டு
               முனைப்புயர வளர்த்துவரு முறையேபோற் பெருக்காளர்
               இனப்பயிரைப் போகமெலா மிடமாற்றிப் பயிர்செய்தே
               இனித்தமிழ்ப் பயனேபோ லிரும்பயன்கைக் கொள்வாரே.

          35.   அருள்பதித்துப் பிறவுயிர்க்க ணன்புவைத்துப் பசியென்னும்
               இருள்பதைத்து வெருண்டோட இட்டுண்ணுங் கடப்பாடர்
               தெருள்பதித்த பாவினிடைச் செந்தமிழ்ப்பா வாணர்கணற்
               பொருள்பதித்தல் போன்றவர்நற் பொறுக்குவிதை விதைப்பாரே.

          36.   கண்வளர்ந்து வளர்கவெனக் காதலிளங் குழவிதனைப்
               பண்வளருந் தொட்டிலிடைப் படுக்கவைக்கும் படியேபோல்
               மண்வளர்ந்து வெளிப்போந்து வளர்கவென வுழுபடைச்சாற்
               கண்வளர விதையினைக்கட் காவியர்சா லிடுவாரே.
-------------------------------------------------------------------------------------------
          30. தாள் - முயற்சி. 31. மல் - உடல்வலி 34. மனப்பயிர் - அறிவு. முனைப்பு
- ஊக்கம். இனப்பயிர் - ஒரே பயிர் 35. தெருள் - தெளிவு.