58. நின்னைத் தாங்கு நிலமல வோவெனில் மின்னைத் தாங்கி விளங்கு மணிமுடி தன்னைத் தாங்கிய தாங்கிய தாங்கிய என்னைத் தாங்குத லென்னிது வென்னுமே. 59. கொடியிற் றாரிற் குலவுமுக் கூடலின் முடியிற் சூடு முழுமணி போலதன் நடுவிற் போந்து நலம்பொலி நன்னகர் வடிவிற் சான்ற மலைமகள் போலுமே. | ஷ வேறு வண்ணம் | 60. உளம்படு காதலன் நல்வர வோத உளம்படு தோழியி னொண்கொடி யாடும் வளம்படு மாட மறுககன் றோடி வளம்படு பாத்தி வயலினை மானும். 61. சாலக நேர்மலர் சார்நறு மென்கால் சாலக நேரெதிர் சாலகம் புல்லும் சாலக நீர்தமர் தங்கை வழிந்து சாலக நேர்பொதி சாலகஞ் செல்லும். 62. மார்கழி மாத வயல்வளம் பட்ட சேர்குல மோம்புஞ் செழுமனை தோறும் மார்கழி வேரின் வருஞ்சல தாரை நேர்கழு நீர்கழு நீர்வளர் விக்கும். 63. அடரிதழ் மேய வடுக்கலர் போலப் படரெழி லேய பலவறை புல்லுங் கடிமனை கூடியேழ் காறு முயர்ந்த கொடியணி மாடநீள் காண்டலி னோங்கும். ------------------------------------------------------------------------------------------- 58. தாங்கியவன் - இராவணன், இலங்கை, மலை 60. மறுகு - தெரு 61. சாலகம் - பூவரும்பு. சாலகம் நேர்மலர் - அரும்பலர்ந்த பூ- சாலகம் - சன்னல். சால் அகம் நீர் - நீச்சாலிலுள்ள நீர். சாலகம் - சலதாரை. பொதிதல் - மூடுதல். 62. மார் - மார்பு. வேர் - வியர்வை. கழுநீர் - அரிசி கழுவுநீர், செங்கழுநீர்ச் செடி. 63. படர் எழில் ஏய - மிக்க அழகு பொருந்திய | |
|
|