பக்கம் எண் :


156புலவர் குழந்தை

   
         98.    தோலினர் புள்ளிற் றுனைபரி யாளர்
               வேலினர் காவலர் மிடைதெரு வெல்லாம்
               ஆலின ராயிரண் டஃறிணை யல்லாப்
               பாலினர் மேவும் பரிசினைக் கொண்ட.
 
ஷெ வேறு வண்ணம்
 
         99.    உகைபடு கூந்தலுக் குவமை யாகிய
               முகிலுனுக் குதவுதல் முறைமை யாதலான்
               வகைபடு மெழுநிலை மாடத் தின்னறும்
               புகையினை மடநலார் புகுதச் செய்வரால்.

         100.   புக்கில ரெனமனம் புழுங்கு வோர்களைப்
               பொய்க்கதை பற்பல புகன்றும் மெய்ப்பொருள்
               தொக்கிய நகைச்சுவைக் கதைகள் சொல்லியும்
               தக்கசெந் தமிழ்மொழித் தாயர் தேற்றுவர்.

         101.    உடைமையை நாடியே யூரை நீங்கினோன்
               கடமையிற் றவறியே காலந் தாழ்க்கவக்
               கொடுமையை யிதுவெனக் குறிப்பி னோரவே
               மடமொழி யிறைச்சிமேல் வைத்துக் கூறுமே.

         102.   தாய்தனைப் பிரிந்தகந் தனித்த பேரிளஞ்
               சேய்தனைப் பேணிடுஞ் செவிலித் தாய்சொலும்
               ஆய்தமிழ்க் குரியபண் ணத்தி கேட்டுமே
               வாய்தனைத் திறந்துதன் மகிழ்ச்சி காட்டுமே.

         103.   ஓட்டியே யழுகையை யுவந்த வாவொடு
               கேட்டிடச் சிறுவர்கள் கிளந்து செந்தமிழ்ப்
               பாட்டினு முரையினும் பயிலப் பாங்கொடு
               பாட்டியர் விடுகதை பகரு வாரரோ.

         104.   தெருவிடைத் தயிர்த்தலைச் சிறுவர் தாயர்கை
               ஒருவியே யகப்படா தோட்டங் கொள்ளுவர்;
               பருகிட மறுத்துணாப் பந்தர் சுற்றியே
               திருவமர் சிறுமியர் சினப்பச் செய்குவர்.
-------------------------------------------------------------------------------------------
         98. தோல் - யானை. துனைதல் - விரைதல். ஆலுதல் - ஆரவாரித்தல். 99.
உகைபடல் - வளர்தல். 101. உடைமை - பொருள். ஓர - தெரிய. இறைச்சி - கூறும்
பொருளின் புறத்தே சொல்லும் குறிப்புப் பொருள் அது. அது, கருப்பொருளாற் கூறுவது.
102. பண்ணத்தி - ஒரு வகை இசைப்பாட்டு.