119. நெல்லுடைக் குதிர்க ளோங்கு நெடுநகர்க் குறுப்ப தான கல்லிடைச் சுடுகற் சேர்த்துக் கவினுறக் கட்டப் பட்ட இல்லிடைப் புழங்கற் கான விருவகைக் கலங்கள் செய்யும் மல்லுடைக் களரிக் கூடம் வகைவகை வடிவங் காட்டும். 120. மண்ணுழு படையுங் கான மரமுழு படையு மெய்யிற் புண்ணுழு படையு நூலோர் புலமுழு படையு மில்லின் கண்ணுழு படையு மற்றைக் கருவியுஞ் செய்யுங் கொட்டில் எண்ணுழு படையோ டல்லு மிடையறா தியங்குந் தானே. 121. நூல்பிடித் தறுத்துச் சேத்து நுண்டுளைப் படுத்துப் பொத்திச் சால்பிடித் துழுமே ரில்லஞ் சமைகரு விகள்தேர் பெட்டி கால்பிடித் தமைத்த கச்சுக் கட்டிலுந் தட்டு முட்டும் பால்பிடித் தியற்றுந் தச்சம் பட்டறை நெட்டி லேய்க்கும். 122. பாவைசெய் யகமு மொன்பான் படரொளி மணிகள் கோத்துக் கோவைசெய் யகமு மில்லைக் குறித்தநற் கோலஞ் செய்யுங் கூவைசெய் யகமு மோவக் கூடமும் பிறவும் வேண்டுந் தேவைசெய் யகமுஞ் செல்வச் சிறப்பினை விளக்கிக் காட்டும். 123. மன்றமு மிளம்பூங் காவும் மறுகணை முடுக்குஞ் சீர்செய் குன்றமு நறுநீ ராடு குளமுமா டிடமுங் கோணந் துன்றொளி விளக்கு மாடந் தோய்நிலா முற்றந் தம்மோ டின்றெனு மிலம்பா டின்றி யிலங்கின ளிலங்கை மானும். 124. அரசிய லலுவல் காணு மகங்களோ டறந்தேர் மன்றும் வரிசையி னொடுபா ராளு மன்றமு மொன்றுங் குன்றாப் பரிசொடு கலைகள் தேரும் பல்கலைக் கழகந் தம்மோ டுரைசெயற் குரிய வெல்லா மொருங்குமுந் துறவே நின்ற. ------------------------------------------------------------------------------------------- 119. சுடுகல் - சுண்ணம். இருவகைக்கலம் - பொற்கலம், மட்கலம். பொன் - செம்பு, பித்தளை முதலியன. மல் - வளம். களரி - பணி செய்யிடம். 120. உழுதல் - கிளறுதல், தொழில்செய்தல். எண் உழுபடை - அறிவு. எண் - எண்ணம். அல் - இரவு 121. சேத்தல் - செதுக்குதல். பொத்துதல் - பொருத்தல். கருவியை ஏரொடும் கூட்டுக. பால்பிடித்து - பகுதிப்பட நெட்டில் - நெடுஇல் - பெருங்குடி வாழ்மனை. இடையறாது தொழில் நடைபெறுமென்க. 122. கூவை - செடிவகை. தேவை - தேவையான பொருள் 123. மன்றம் - மரத்தடிப் பொதுவிடம். முடுக்க - தெருக்கள் கூடும் மூலை. கோணம் - மூலை. இலம்பாடு - இன்மை. | |
|
|