பக்கம் எண் :


164புலவர் குழந்தை

   
2 . இலங்கைக் காண்டம்
 
1. இராவணப் படலம்
 
அறுசீர் விருத்தம்
 
         1.     தண்டமி ழகத்தின் பண்டைத் தலைநக ராகிச் செல்வம்
               மண்டிய இலங்கை மூதூர் வரன்முறை கண்டாம்; மற்றத்
               தண்டமி ழகத்தைக் காக்கத் தனிக்களத் தொருவ னாகி
               எண்டிசை புகழ வீந்த இராவணன் இயல்பு காண்பாம்.

         2.     வழிவழி யிலங்கை மூதூர் மருவியே தமிழ கத்தை
               மொழிகுறை யின்றித் தம்மின் முறைபுரந் துரிய செல்வம்
               வழிதரத் தமிழர் போற்றும் மாபெருந் தலைவர் தங்கள்
               வழிமுறை யாக வந்தோன் விச்சிர வாவு வென்பான்.

         3.     அன்னவன் தேவி யான அணங்குகே கசியெம் மன்னை
               முன்னவர் புகழை யெல்லாம் முகையலர் படப்போ தாக்கித்
               தன்னரும் புகழை யின்பத் தமிழர்வாழ் வதனுக் கீந்த
               என்னருந் தலைவன் தன்னை ஈன்றனள் இனிதின் மாதோ.

         4.     ஈன்றவ ருவந்து மக்கட் கிராவணன் இவனா மென்ன
               ஆன்றபே ரிட்டு நாளு மன்பொடு நலம்பா ராட்டி
               ஈன்றஞான் றினுமப் பெற்றோர் இனிதுவந் திடவே யான்ற

               சான்றவ னாக்க வெண்ணித் தாய்மொழி பயிற்று வித்தார்.
-------------------------------------------------------------------------------------------
         4. இராவணன் - பேருரிமை யுடையவன், இரு ஆவணன். இரு - பெரிய.
ஆவணம் - உரிமை. இராவணன் - பிறர்க்கில்லா அழகன், பேரழகன். இரா - பிறர்க்கு
இல்லாத; வண்ணன் - அழகன்.