22. காரும்பெறு மலையுமலை கடலும்பொரு களிறும் பாருந்தன தொருகானொடி படவேவரு பரியும் தேரும்பொரு தகரும்பல திறலூர்தியும் பிறவும் ஊரும்படி கற்றேயறி வுற்றேபெயர் பெற்றான். 23. கடலும்படு வகழின்கடை கலியும்பொரு வலியும் நுடலும்பெரு காலேணியு நூலேணியு மதின்மூய் அடலும்பெரு மலையுந்தரு வடரும்பெரு காடும் உடலும்படி படையோடவ னுற்றேநனி கற்றான். 24. இனியாரெனை யொப்பாரென வெதிர்கூவியே யிகலி பனியேகிட வியல்பேபொரு பகலோனென முரணி இனையேறென வரியேறென விடியேறென விடறித் தனியேதனை நிகர்வாரறத் தானேதனி யானான். 25. வாளென்படு மொருவாவுடல் வலியென்படு மணிகொள் ஆளென்படுந் துணையென்படு மறிவென்படு முடலும் கேளென்படும் வழிவந்திடு கிளையென்படு முயிர்வாழ் நாளென்படு மென்றேபகை நடலம்பட வார்ப்பான். | ஷ வேறு வண்ணம் | 26. இன்னண மிருவகைக் கல்வி யீண்டியான் கன்னவில் வலியுடைக் கவவுத் தோளினான் தன்னல மின்றியே தமிழர்க் காகத்தன் இன்னுயிர் கொடுக்கவு மிருக்கு மேன்மையான். 27. நாற்றிசை விளக்குறும் பகலு நாணுற மாற்றுயர் பொன்னென வயங்கு மேனியான் போற்றியே பெற்றவர் புனைந்த பேரினுக் கேற்றபே ரழகினான் இனிமை நோக்கினான். ------------------------------------------------------------------------------------------ 23. கலி - போர். நுடலல் பொருதல். நூலேணி - மதில் முடியைப் பற்றும் கொக்கியுள்ள கயிற்றேணி. அடலல் - பொருதல். 24. இனைஏறு - வருத்துங்காளைமாடு. அரி - சிங்கம். 25. என்படும் - என்செய்யும், என்ன பயன்படும். கேள் - நட்பு வழிவந்திடு கிளை - மறக்குடிச்சுற்றம். நடலம் - நடுங்கல். 26. கல்நவில் - மலை போன்ற. கவவு - உறுதி. 27. பேரழகினான் - இராவணன். | |
|
|