35. அருளுடை யந்தண ராக்கு நல்லவை பருகிசை மேவியாழ்ப் பாணர் நாளவை மருவிய முத்தமிழ் வாயின் றீஞ்சுவை பெருகிய பயன்படு பெரிய பொற்குவை. 36. மிக்கொக்க பகுத்தறி வுடைய மேதகு மக்கட்கு வேண்டிய மாட்சி யாவையும் தொக்கொக்க வேதமிழ்த் துறைப டீஇயநன் மக்கட்கு மிக்கனாய் வயங்கி னானரோ. 37. மருந்தெனப் பெருந்தமிழ் மக்கட் காத்திடும் திருந்திய பருவமுஞ் சேரத் தந்தையும் பொருந்திய மணிமுடி புனைந்து செல்வனை அருந்தமி ழகந்தனக் கரச னாக்கினான். 38. குணிமணி மதிவெண் குடைநி ழற்றவே மணிமுடி புனைந்தயல் மன்னர் போற்றவே அணிமணிப் பொன்செய்தநல் லரசு கட்டிலில் இணையிலா விராவண னினிதி னேறினான். 39. நல்லதுந் தீயது நாடி நாடொறும் அல்லது நீ்க்கியே நல்ல தாக்கியே மல்லலந் தாமரை மாலை தாங்கிய கல்லிவர் தோளினா னினிது காத்தனன். 40. குருந்தமிழ் மொழிபுனை கும்ப கன்னனும் திருந்திலாப் பீடணன் என்னும் தீயனும் கருங்குழற் செய்யவாய்க் காம வல்லியும் பெருந்தமிழ்க் காவலன் பின்னர்த் தோன்றினார். | 2. உலாவியற் படலம் | 1. இவ்வகை தமிழருக் கேம மாகிய ஒவ்விய படியெலா முதவித் தன்னெனச் செவ்விய முறைசெயப் போந்த செம்மலுக் கவ்வியற் குறுதுணை யாக்க வேண்டியே. ------------------------------------------------------------------------------------------- 36. மிக்குஒக்க - மிகுந்துஒத்துள. மேதகு - மேன்மையான. மாட்சி குணம். வயங்குதல் - விளங்குதல். 38. அரசுகட்டில் - அரியணை. 39. மல்லல் - வளம். 1. ஒவ்விய - ஒத்த. இயல் - ஆட்சி. | |
|
|