33. பூவிற்புனை பொன்னூலிடை போகத்திகழ் பச்சைப் பாவிற்புனை பட்டாடைகொள் பச்சைத்தொடி யாரின் காவிற்புனை புள்ளோடறு காலும்பல கனியும் பூவிற்புனை தேனும்பெறு புதுமைச்செயல் காட்டும். 34. விசும்பிற்பொலி மீன்போலவு மிடைநீலவி ரிப்பிற் றசும்பிற்பொலி தருமேலவர் தாமேவுதல் போலும் பசும்புற்றரை மிசைமாவினம் பசம்புற்றினுங் காட்சி அசும்புற்றிடு நீரோடையி னருகிற்கொடு காட்டும். 35. கொன்றைக்குழ லொடுவேய்ங்குழற் குரல்கேட்டின நிரையும் மன்றிற்புக வம்மாவென வருமைகச்செயல் கண்டு கன்றுக்கல் வெறுவுற்றல கனிவுற்றவை யிசையின் இன்றுக்கென விறையுந்தமி ழிசைமேன்மையை யெண்ணும். |
அறுசீர் விருத்தம் |
36. மழையினா லிலையை நீத்து வருபனி யதனாற் கூர்த்து நுழைவெயி லதனாற் பூங்காய் நுற்றியே பழுக்குங் கானம் பழையதைப் பூப்பால் நீத்துப் பண்பினாற் கருப்ப முற்றிக் குழவியைப் பெற்றே யின்பங் கொள்ளமீர்ங் குழலே போலும். 37. ஐயணி கனியைக் கொம்பர் அமிழ்துறழ் பவளச் செவ்வாய் மையணி கண்ணார் கொள்ள வளைந்துமே கொடுக்குங் காட்சி நெய்யணி காணப் போந்த நேரிழை நல்லார் கோயில் கையணி சேயைத் தாயுங் களிப்பொடு கொடுத்தால் போலும். |
கலிவிருத்தம் |
38. ஆயும்பொருள் பலவுந்தக வாய்ந்தேமகிழ்ந் தினிய காயும்பொதிர் கதிரும்முதிர் கனியுந்நறுங் கிழங்கும் தோயுந்தயிர் பாலுந்தகு சுவைகண்டுணு நாவும் ஓயும்படி யிறையோனுட னுண்டேவழி கொண்டார். ------------------------------------------------------------------------------------------- 33. பூ - பூ வேலை. தொடி - வளையல். புள் - பறவை. அறுகால் - வண்டு. 34. மிடைதல் - செறிதல். விரிப்பு - கம்பளம். தசும்பு - பொன். மா - விலங்கு. அசும்பு - நீரூறுதல். 35. மன்று - ஆத்தொழு. வெருவுதல் - அஞ்சுதல். கனிவு - உருக்கம். இன்துக்கு - இனிமையைப் பருகி. 36. கூர்த்தல் - தளிர்த்தல். நுற்றி - முற்றி, பண்பு - புணர்ச்சி 37. ஐ - மென்மை. நெய்யணி - ஈன்றவள் நெய் தேய்த்து நீராடுதல் 38. பொதிர்தல் - நிறைதல். |